School Student : மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்.!அரை மணி நேரம் அதிகரிப்பு-புதிய அறிவிப்பை வெளியிட்ட கல்வித்துறை

First Published | Jul 9, 2024, 3:15 PM IST

பள்ளி வேளை நேரம் அரை மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரசு பள்ளிகளிலும்  பாட வகுப்புகள்(பீரியட்கள்) அதிகரித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தினசரி 7 வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் இனி  நடப்பு கல்வியாண்டு முதல் 8 வகுப்புகளாக நடைபெறும் என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிகளில் பாட வேளை அதிகரிப்பு

பள்ளிகளில் இதுவரை நடைபெற்று வந்த 7 பாடவேளை இனி 8ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கூடுதலாக பாடங்களை கற்கும் வகையில் கல்வித்துறை இந்த முடிவை எடுத்துள்ளது. புதுச்சேரியில் சிபிஎஸ்சி பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால் அரசு பள்ளிகளில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகள் அரை மணி நேரம் முன்னதாக அதாவது காலை 9 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி நேரம் நீட்டிப்பு

இது தொடர்பாக புதுச்சேரி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் காலை 9 மணி முதல் 9.15 மணி வரை அசெம்பிளி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து (பீரியட்கள்) முதல் பாட வேளை 9. 15 முதல் 10:00 மணி வரையும், இரண்டாவது பாடவேளை 10 மணி முதல் 10 45 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. 

இந்த வங்கி வாடிக்கையாளரா நீங்கள்.. யுபிஐ, ஏடிஎம் இயங்காது.. 13 மணி நேரம் சேவை இருக்காது!


புதிய பாடவேளை என்ன.?

10 .45 முதல் 10 .55 மணி வரை மாணவர்களுக்கான இடைவேளை வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக காலை 10.55 முதல் 11. 40 வரை (பீரியட்கள்) மூன்றாவது பாடவேளையும்,  11.40 முதல் 12.25 வரை நான்காவது பாட வேளையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மதியம் உணவு இடைவேளையாக 12. 25 முதல் 1:30 வரை ஒரு மணி நேரம் 5  நிமிடங்கள் இடைவேளை விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

School Student

1மணி நேரம் 5 நிமிடம் உணவு இடைவேளை

இதனைத் தொடர்ந்து பிற்பகல் 1:30 முதல் 2. 10 மணி வரை ஐந்தாவது பாட வேளையும்,  2. 10 மணி முதல் 2.50 வரை 6வது பாடவேளையும் (பீரியட்கள்)  நடைபெறும் எனவும்,  இதற்கு அடுத்ததாக 2. 50 முதல் 3 மணி வரை மாணவர்களுக்கான இடைவேளை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ச் சொன்னதால் கண்ணாடியை சுக்குநூறாக நொறுக்கிய இளைஞர்

காலையில் 45 நிமிடம்- மதியம் 40 நிமிடம்

மதியம்  3 மணி முதல் 3.40 வரை 7 வது பாட வேளையும்,  3.40 முதல் 4.20 வரை 8வது பாட வேளையும் நடைபெறும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் காலை நேரத்தில் ஒரு பாட பிரிவின்(பீரியட்கள்) நேரம் 45 நிமிடமாகவும், மதியத்துக்கு பிறகு 40 நிமிடமாகவும் பாடவேளை நடைபெறும் என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. 

Madurai: படிக்கட்டில் பயணம்; பாதியில் இறங்க

Latest Videos

click me!