School Holiday: பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை குறித்து வெளியான சூப்பர் செய்தி! பள்ளிக்கல்வித் துறை!

First Published | Sep 20, 2024, 6:53 AM IST

School Holiday: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் மற்றும் கோடை வெயில் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்ட பள்ளி திறப்பு, சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், தற்போது பள்ளி நேரம் குறைக்கப்பட்டு புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

School Student

தமிழகம் மற்றும் புதுச்சேரி ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு மே மாதம் கோடை விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை மக்களவை தேர்தல் காரணமாக 1 முதல் 9ம் மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை வழங்கப்பட்டது. அதேபோல் ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஜுன் 1ம் தேதி அல்லது ஜுன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்.

இதையும் படிங்க: School Student: பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500! விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது? வெளியான தகவல்!

School ReOpen

ஆனால், மக்களவை தேர்தல் முடிவு  மற்றும் கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடப்பு கல்வியாண்டில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து 2024-25ம் கல்வியாண்டுக்கான நாள்காட்டியை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டிருந்தது. அதில், பள்ளியின் வேலை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள், 1 முதல் 12ம் வகுப்புக்கான தேர்வு காலங்கள், உயர்க்கல்விக்கான வழிகாட்டு வகுப்புகள், விடுமுறை போன்ற விவரங்களை வெளியிட்டது.

Tap to resize

Saturday Working Day

அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட்டு வந்தன. இதில் 5 சனிக்கிழமைகள் முழு வேலை நாளாக பள்ளிகள் இயங்கி வந்த நிலையில் அடுத்து வரும் 7 சனிக்கிழமைகளில் அதாவது, செப்டம்பர்- 21, 28, அக்டோபர்-5, 19, 26, நவம்பர் -9, 23 ஆகிய தேதிகளில் அரை நாள் மட்டும் வகுப்புகளை நடத்தப்படும் என கல்வித்துறை திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க: SSC Job Vacancy: 40,000 மத்திய அரசுப் பணியிடங்கள் காலி! அப்ளை செய்வது எப்படி?

Saturday Half Day

மேலும்  காலை 9.15 மணி முதல் 9.30 வரை இறைவணக்கம் நிகழ்ச்சி நடைபெறும். அதை தொடர்ந்து 9.30 மணி முதல் 10.10 மணி முதல் பாட வேளை, 10.10 முதல் 10.50 மணிவரை இரண்டாம் பாடவேளை, 10.50 முதல் 11.30 மணி வரை மூன்றாம் பாடவேளையில் வகுப்புகள் நடக்கும். 11.30 மணி முதல் 11.40 மணி வரை 10 நிமிடங்கள் மாணவர்களுக்கான இடைவெளி விடப்படும். தொடர்ந்து 11.40 மணி முதல் 12.20 மணிவரை நான்காம் பாடவேளை, 12.20 மணி முதல் 1 மணி வரை ஐந்தாம் பாட வேளை நடக்கும். ஒவ்வொரு பாட வேளையும் 40 நிமிடங்கள் கொண்டதாக நடத்தப்படும் என்று சனிக்கிழமைக்கான புதிய பாட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Tamilnadu Government School: பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு! செப்டம்பர் 27ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு!

Government School

கடந்த சில நாட்களாக கோடை வெயிலை மிஞ்சும் அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருவதால் சனிக்கிழமை மட்டும் தற்போது அரைநாளாக பள்ளி நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது.  இந்த உத்தரவு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து பிராந்தியங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!