தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் நீக்கம்! CM போட்ட ஒரே போடு! ஆளுநர் மாளிகை விளக்கமும் DD தமிழ் மன்னிப்பும்!

First Published | Oct 18, 2024, 6:40 PM IST

சென்னை தொலைக்காட்சி பொன்விழாவில் ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்தில் 'திராவிடம்' வரியைத் தவிர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்து, ஆளுநரைத் திரும்பப் பெறக் கோரியுள்ளார்.

சென்னை சேப்பாக்கம் டிடி அலுவலகத்தில் இந்தி மாதம்  கொண்டாட்டங்களின் நிறைவு விழா மற்றும் சென்னை தொலைகாட்சி பொன்விழா நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது "தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரியை விட்டு பாடியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 


இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி : கடந்த ஒரு மாதங்களாக நாடு முழுவதும் இந்தி மொழி கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் இந்த நிறைவு விழாவில் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சி இந்தி மொழி விழா கொண்டாடப்படுவது மூலம் இந்தி மொழி திணிக்கப்படுகிறது என கூறுகின்றனர். இந்தியாவில் உள்ள அனைத்து மொழியும் கொண்டாடப்பட வேண்டியவை எனவே இந்தி மொழி திணிக்கப்படவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தின் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள் என பல்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளேன். இந்தி மொழி கற்க மிக பெரிய ஆர்வம் உள்ளது. இங்கு வந்த நேரத்தில் இந்தி மொழிக்கு எதிர்ப்பு என கூறினார்கள். ஆனால் மக்களை பார்க்கும் போது அப்படி இல்லை என தெரிந்துக் கொண்டேன்.

Tap to resize

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் உள்ள மொழிகளை VERNACULAR மொழி என கூறினார்கள். அப்படி என்றால் அடிமைகள் மொழி என அர்த்தம் இதனை எதிர்த்து பாரதியார் மிக பெரிய எதிர்ப்பை தெரிவித்தார். தமிழ் ஆங்கிலத்தை விட அறிவியல் ரீதியாகவும், கலாச்சாரம் ரீதியாகவும் சிறந்தது என கூறினார். ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு சென்றாலும் ஆங்கில மொழிக்கு நாம் அடிமையாக இருந்தோம். அதனால் இந்தியாவின் மொழிகள் பெரிய அளவில் வளரவில்லை. பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ் மிக பழமை வாய்ந்த மொழி அதில் நாம் பெருமைப்படுகிறேன். கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறிய ஆளுநர் கடந்த 50 ஆண்டுகளில் மக்கள் மத்தியில் விஷம் பரப்பட்டு உள்ளது என குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும் என ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

MK Stalin in Vellore

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: ஆளுநரா? ஆரியநரா? திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர். திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும் என காட்டாக தெரிவித்துள்ளார். 

இதனிடையே டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் சர்ச்சையில் ஆளுநருக்கு தொடர்பு இல்லை. இந்த விவகாரம் உடனடியாக நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளதாக தமிழ்நாடு ஆளுநரின் சமூக ஊடக ஆலோசகர் எக்ஸ் தளத்தில் விளக்கமளித்துள்ளார். இதனையடுத்து டிடி தமிழ் தரப்பில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது கவனச்சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியை தவறவிட்டு விட்டார்; கவனக்குறைவால் நடத்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர். 

Latest Videos

click me!