DA Hike: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு! வெளியான சூப்பர் அறிவிப்பு!

First Published | Oct 18, 2024, 4:38 PM IST

Tamil Nadu government employees DA Hike: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். 

மத்திய, மாநில அரசு ஊழியர்களக்கு டிஏ எனப்படும் அகவிலைப்படி உயர்வு ஆண்டுக்கு 2 முறை உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 16ம் தேதி மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி ஏற்கனவே 50%ஆக இருந்த நிலையில் தற்போது 53% உயரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் பல முன்னோடி நலத்திட்டங்களை மக்கள் நலன் கருதி சிறப்புற நடைமுறைப்படுத்துவதில் பெரும் பங்காற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இந்த அரசு கருத்தில் கொண்டு, அவர்களது நலன் காக்கும் வகையில் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! இந்த மாதம் முன்கூட்டியே சம்பளம்? எப்போது தெரியுமா? வெளியான தகவல்!
 

Tap to resize

இந்த வகையில் ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு 01.07.2024 முதல் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 53 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் முதலமைச்சர் இதனை கனிவுடன் பரிசீலித்து 01.07.2024 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள்.

இதனால் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 3 சதவீதம் உயர்ந்து 01.07.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள். ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். 

இதையும் படிங்க:  TN Heavy Rain Alert: இந்த 16 மாவட்டங்களில் பதற வைக்குப்போகதாம் கனமழை! சென்னையின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய் 1931 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.

Latest Videos

click me!