தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் 2025 வரையான 4 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படும். இந்த உயர்வால் 8 லட்சம் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விதி எண் 110-ன் கீழ் பல்வேறு சூப்பர் அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் உள்ளிட்ட 9 அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். இந்த அறிவிப்பை அடுத்து அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி 53%ல் இருந்து 55%ஆக உயர்ந்தது.
23
16 லட்சம் பயன்பெறுவர்
01-01-2025 முதல் 2 விழுக்காடு அகவிலைப்படியினை மத்திய அரசு அலுவலர்களுக்கு உயர்த்தி வழங்கிட அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், மாநில அரசுப் பணியாளர்களுக்கும் 01-01-2025 முதல் அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும் . இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வினை நடைமுறைப்படுத்திட ஆண்டு ஒன்றுக்கு 1,252 கோடி ரூபாய் கூடுதல் நிதி செலவிடப்படும் என்று தெரிவித்திருந்தார்.
33
4 மாத அகவிலைப்படி
இதற்கான அரசாணையையும் தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு இம்மாத ஊதியத்துடன் 4 மாத (ஜனவரி – ஏப்ரல் 2025) அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை (DA Arrears) கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 8 லட்சம் அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.