அதிமுக ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் அவ்வப்போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள சேவூர் ஊராட்சியில் வசித்து வருபவர் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்து வந்தார். 2021 சட்டமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.
23
லஞ்ச ஒழிப்புத்துறை
இந்நிலையில் சேவூர் ராமசந்திரன் வீட்டில் இன்று காலை முதல் 20க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சேவூர் ராமச்சந்திரன் மகன்களான விஜயகுமார், சந்தோஷ்குமார் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
33
சொத்து குவிப்பு
அதிமுக ஆட்சியின்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவர் சேவூர் ராமச்சந்திரன். அப்போது வருமானத்துக்கு அதிகமாக அதாவது 200 கோடிக்கும் மேலாக சொத்துகள் சேர்த்ததாகவும், தமிழகம் மட்டுமல்லாது, கர்நாடகா உள்ளிட்ட பல இடங்களில் சொத்துகளை குவித்ததாகவும் புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வரும் சம்பவம் அவரது ஆதரவாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனைக்கு அதிமுக பொதுச்செயலாளர் விரைவில் கண்டன அறிக்கை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.