வார விடுமுறை அதுவுமா தமிழகம் முழுவதும் மின்தடை ஏற்படும் இடங்கள்! எத்தனை மணிநேரம்?

Published : May 17, 2025, 07:42 AM IST

தமிழகத்தில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக இன்று சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும்.

PREV
110
மாதாந்திரப் பராமரிப்பு பணிகள்

தமிழகத்தில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை விரிவாக பார்ப்போம்.

210
ராமாபுரம்

ராயலா நகர் 1 மற்றும் 2வது தெரு, வள்ளுவர் சாலை சந்திப்பு மற்றும் வடக்கு, பாரதி சாலை, பாரதி நகர், ஆண்டவன் நகர், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், திருமலை நகர், முகலிவாக்கம் பகுதி, சபரி நகர், ஸ்ரீ ராம் நகர், சுபஸ்ரீ நகர், கமலா நகர், முகலிவாக்கம் மெயின் சாலை, காமாட்சி நகர், கிருஷ்ணவேணி நகர், லட்சுமி நகர், ஆசிரமம் அவென்யூ, ஏஜிஎஸ் காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடங்கும்.

சென்னீர்க்குப்பம்:

கன்னபாளையம், ஆயில்சேரி, பாரிவாக்கம், பிடாரிதங்கள், பானவேடு தோட்டம், கோளப்பஞ்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

310
கோவை மாவட்டம்

காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர், சாய்பாபா காலனி, பூமார்க்கெட், ரேஸ் கோர்ஸ், சிவானந்தா, தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் துறை முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகர் வரை, பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம். சீரநாயக்கன்பாளையம், பி.என்.புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி சுண்டபாளையம், செல்வபுரம், அண்ணா நகர் வீட்டுவசதி பிரிவு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.

410
நெல்லை மாவட்டம்

ஹமீபுரம், சந்தை முக்கு, நேதாஜி ரோடு, குறிச்சி, ஆசாத் ரோடு, பஜார் ஏரியா, மூத்த மீரா பள்ளி ஸ்ட்ரீட், GH, காயிதேமில்லத் காலனி, சித்திக்நகர், நேருநகர், பாத்திமாநகர் 1 மற்றும் 2, பூங்காநகர், அன்னைஹாஜிராநகர், ஏ.கே.கார்டன், டீச்சர்ஸ் காலனி, இன்ஜினியர்ஸ் காலனி, நேதாஜி ரோடு, சி.பி.எல். காலனி, முகமதுநகர், டேனிஷ்நகர், கரீம்நகர் ஒன்று, இரண்டு மற்றும் மூன்று, போஸ்நகர், ரெட்டியார்பட்டி ரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 10 மணி முதுல் மதியம் மணி வரை மின்தடை செய்யப்படும்.

510
நாமக்கல் மாவட்டம்

சங்ககிரி நகர், சங்ககிரி ரெயில் நிலையம், தேவண்ணக்கவுண்டனூர், சுண்ணாம்பு குட்டை, ஐவேலி, ஒலக்கச்சின்னானூர், தங்காயூர், அக்கமாபேட்டை, வடுகப்பட்டி, இடையப்பட்டி, வளையசெட்டிபாளையம், ஆவரங்கம்பாளையம், வைகுந்தம், இருகாலூர், வெள்ளையம்பாளையம், காளிகவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

610
விழுப்புரம் மாவட்டம்

வளவனூர் பகுதியில் குடுமியாங்குப்பம், மல்ராஜங்குப்பம், செங்காடு, இளங்காடு, கல்லப்பட்டு, தனசிங்குப்பாளையம், பெத்தரெட்டிக்குப்பம், எரிச்சினாம்பாளையம், மேல்பாதி, நரையூர், குருமங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்கள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை.

710
திருச்சி மாவட்டம்

கல்லக்குடி, வடுகர்பேட்டை, பளிங்காநத்தம், மேலரசூர், மால்வாய், சரடமங்கலம், எம்.கண்ணனூர், ஒரத்தூர், சாத்தப்பாடி, சிலுவைப்பட்டி, ஆமரசூர், தாப்பாய், வரகுப்பை, சிறுகளப்பூர், அழுந்தலைப்பூர், கருடமங்கலம், வந்தலை கூடலூர், சிறுவயலூர், காணக்கிளியநல்லூர், பெருவளப்பூர், வி.சி.புரம், கோவண்டாக்குறிச்சி, புதூர்பாளையம், ஆலம்பாக்கம், விரகாலூர், ஆ.மேட்டூர், நத்தம், திருமாங்குடி, டி.கல்விக்குடி, ஆலங்குடிமகாஜனம், செம்பரை, திண்ணியம், அரியூர், கல்லகம், கீழரசூர் மற்றும் புள்ளம்பாடி ஆகிய இடங்கள். காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும்.

810
தஞ்சாவூர் மாவட்டம்

பட்டுக்கோட்டை பகுதியில் பெரியதெரு, வ.உ.சி. நகர், ஆர்.வி.நகர், வளவன்புரம், கண்டியன் தெரு, மன்னைநகர், தாலுகாஆபிஸ், வீட்டுவசதி வாரியம், மயில் பாளையம், தங்கவேல்நகர், பெரியகடை தெரு, தேரடிதெரு, பாக்கியம் நகர், அறந்தாங்கி ரோடு, பண்ணவயல்ரோடு, மாதா கோவில் தெரு, சிவக்கொல்லை, செட்டித்தெரு, ஆஸ்பத்திரி ரோடு, தலையாரிதெரு பள்ளிக்கொண்டான், அணைக்காடு, பொன்னவராயன்கோட்டை, முதல்சேரி, சேண்டாக்கோட்டை, மாளியக்காடு ஆகிய இடங்கள். மேலும், துவரங்குறிச்சி, பழஞ்சூர், காசாங்காடு, கள்ளிக்காடு, ராசியங்காடு துவரங்குறிச்சி, மன்னாங்காடு, மழவேனிற்காடு, வெண்டாக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி பவர் கட் செய்யப்படும்.

910
திருவண்ணாமலை மாவட்டம்

ஆரணி டவுன், சைதாப்பேட்டை, ஈ.பி.நகர், சத்தியமூர்த்தி சாலை, கொசப்பாளையம், வி.ஏ.கே.நகர், சேத்துப்பட்டு ரோடு, சேவூர், ரகுநாதபுரம், முள்ளிப்பட்டு, ஹவுசிங் போர்டு, விண்ணமங்கலம், மேல்சீசமங்கலம், வேலப்பாடி, இரும்பேடு, எஸ்.வி.நகரம், குன்னத்தூர், அரியப்பாடி, வெள்ளேரி, மேலும், வந்தவாசி கோட்டத்திற்கு உட்பட்ட வந்தவாசி, கீழ்கொடுங்காலூர், தெள்ளார், புரிசை, மாம்பட்டு, நல்லூர், சத்தியவாடி மற்றும் மேல்மா, ஆலத்தூர், நர்மாபள்ளம், தேத்துரை, அத்தி, தென்எலப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1010
சேலம் மாவட்டம்

தும்பிப்பாடி, மாட்டுக்காரன்புதூர், காடையாம்பட்டி, பெத்தேல்பாலம், சந்தைப்பேட்டை, உம்பிளிக்கம்பட்டி, சுண்டக்காப்பட்டி, காமலாபுரம், சிக்கனம்பட்டி, பல்பாக்கி, தாத்தியம்பட்டி, சின்னமொரப்பம்பட்டி, காமாண்டப்பட்டி ஆகிய பகுதிகள். மேலும், பூமிநாயக்கன்பட்டி, தாசநாயக்கன்பட்டி, கீரைப்பாப்பம்பாடி, தோளுர், இரும்பாலை, அழகுசமுத்திரம், கே.ஆர்.தோப்பூர், பாகல்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை ஏற்படும்.

Read more Photos on
click me!

Recommended Stories