காரில் வைக்கும் படி ஓனர் கொடுத்த கட்டுக்கட்டாக பணம்.! உண்டியலில் போட்ட டிரைவர்- தர மறுத்த கோயில் நிர்வாகம்

Published : May 16, 2025, 10:29 PM ISTUpdated : May 16, 2025, 10:41 PM IST

பெங்களூருவில் 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த டிரைவர், முதலாளியின் 1.51 கோடி ரூபாயை திருடி கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
14
முதலாளிடம் பணத்தை கொள்ளையடித்த ஓட்டுநர்

கடந்த 10 ஆண்டுகளாக பெங்களூருவில் டிரைவராக பணிபுரிந்து வந்த ராஜேஷ், தனது முதலாளி தோட்ட பிரசாத்திடமிருந்து 1.51 கோடி ரூபாயை திருடிச் சென்று அதில் கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

24
பணத்தை திருடிய நம்பிக்கைக்குரிய டிரைவர்

பெங்களூரை சேர்ந்தவர் தோட்ட பிரசாத், ஆடிட்டராக உள்ளார், கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி, தனது கொடந்தராமபுர அலுவலகத்திலிருந்து வங்கியில் டெபாசிட் செய்ய 1.51 கோடி ரூபாயை டிரைவர் ராஜேஷிடம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை பெற்றுக்கொண்ட ராஜேஷ், வங்கியில் பணத்தை செலுத்தாமல்  பணத்துடன் தப்பிச் சென்றுள்ளார்.  10 ஆண்டுகளாக தன்னிடம் பணிபுரிந்த டிரைவரின் துரோகம் தோட்ட பிரசாத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து தோட்ட பிரசாத் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூரைச் சேர்ந்த ராஜேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். திருடப்பட்ட பணத்தை தனது வீட்டில் வைத்து 2.5 லட்சம் ரூபாயை செலவு செய்துள்ளார் ராஜேஷ். போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்து 1.48 கோடி ரூபாய் பணத்தை மீட்டுள்ளனர்.

34
டிரைவர் கைது -காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு

 காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே போலீசார் விசாரணையில் ஓட்டுநர் ராஜேஷ் சுமார் ஒரு லட்சம் ரூபாயை தனது குடும்பத்தினருக்காக பல வித பொருட்களை வாங்கியுள்ளனர். மீதி சுமார் ஒரு லட்சம் ரூபாயை ஒரு கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்தியதாக தெரிவித்துள்ளார்

44
பணத்தை திருப்பி தர மறுத்த கோயில் நிர்வாகம்

இதனையடுத்து அந்த பணத்தை மீட்க நடவடிக்கை எடுத்த நிலையில் அந்த பணத்தை கோயில் நிர்வாகம் திரும்ப தர மறுத்துள்ளது. தென்னிந்திய கோயில்களில் உண்டியல் மூலம் நன்கொடையாக வழங்கப்படும் பணம் பொதுவாக தெய்வத்திற்கு பரிசாகக் கருதப்படுகிறது, அந்த வகையில் பணத்தை திருப்பி தர மறுத்துள்ளனர். 

இதே போல தமிழகத்தில் பக்தர் ஒருவரின் விலை உயர்ந்த ஐ போன் கோயில் உண்டியலில் தவறி விழுந்த நிலையில் அதனை கோயில் நிர்வாகம் தர மறுத்தது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories