வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு பாஜக தொண்டரும் பிரமோஸ் ஏவுகணையாக மாறி திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 77 ஆவது குடியரசு தினத்தை ஒட்டி சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உடன் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தேசிய கொடியை ஏற்றினார். சிறப்பு விருந்தினராக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் கலந்து கொண்டார். முன்னதாக தேசிய கொடியை ஏற்றிய பின்னர் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “உலகத்திலேயே சிறந்த பிரதமர் நமது பிரதமர் தான் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
24
மொழிப்போர் தியாகிகளின் ஆன்மா மன்னிக்காது
2026 தேர்தலில் தமிழ்நாட்டில் விடிவுகாலம் பிறக்க வேண்டும் என்ற உறுதியை இன்றைய தினம் நாம் எடுக்க வேண்டும். மொழிப்போர் தியாகிகளுக்கு வணக்கம் செலுத்தினீர்களே இப்போது யாருடன் திமுக கைகோர்த்துள்ளீர்கள். மொழிப்போர் தியாகிகளின் உயிரைப் பறித்த காங்கிரஸோடு கைகோர்த்துக்கொண்டு மொழிப்போர் தியாகிகளுக்கு வணக்கம் செலுத்துவதை தியாகிகளின் ஆன்மா மன்னிக்காது.
34
பாஜக தொண்டர்கள் ஏவுகணையாக மாற வேண்டும்..
தமிழகத்தை போராட்ட களமாக மாற்றியிருக்கும் முதலமைச்சர் தமிழ்நாடு போராடும், வெல்லும் எனக் கூறுகிறார். பாஜகவில் யார் வேண்டுமானாலும் அமைச்சராக, முதலமைச்சராக, பிரதமராக வரலாம் ஆனால் இங்கு ஆட்சி செய்பவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்கள் மட்டுமே முதலமைச்சராக, துணை முதலமைச்சராக வர முடியும். முதலமைச்சர் வெறிகொண்டு பேசுவது உதயநிதிக்காக தான். திமுகவின் போராட்டங்கள் எல்லாம் குடும்பத்திற்காகத்தான் நாட்டிற்காக அல்ல. தமிழக பாஜக தொண்டர்கள் ஒவ்வொருவரும் பிரமோத் ஏவுகணையாக மாறி திமுக ஆட்சியை வெளியேற்ற வேண்டும்.
தம்பி விஜய்க்கு கொஞ்சம் அனுபவம் பத்தாது, ஒரு சின்ன பையனின் பேச்சாக தான் விஜய் பேச்சை பார்க்கிறேன். உண்மையாகவே தம்பி விஜய் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றால் அவர் தனியாக நின்றால் ஜீரோ தான் என கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் மக்கள் ஆதரவு தருவார்கள். காங்கிரஸின் இன்று விசில் அடிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நானும் உச்சபட்ச பதவியில் இருந்து தான் வந்துள்ளேன். அண்ணாமலையும் ஐபிஎஸ் பதவியை விட்டு வந்துள்ளார். பலர் உச்சபட்ச பதவியை விட்டு வந்துள்ளனர். எம்ஜிஆர் அரசியலோடு சினிமாவில் பயணித்தவர், அதனால் அரசியலில் வெற்றி பெற்றார்.