ராமதாஸிடம் நாங்க பேசி பார்க்கிறோம். அவர் என்ன சொல்கிறார் என்பதை அடுத்து நம்ம பாத்துக்கலாம்’’ எனச் சொல்லிவிட்டு எடப்பாடி பழனிசாமி தனக்கு வலதுகரமான சேலம் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் ஆத்தூர் இளங்கோவனை தூது விட்டு இருக்கிறார்.
பாமக டாக்டர் ராமதாஸ் ஒரு அணி, அன்புமணி ஒரு அணி என்றான பிறகு டாக்டர் அன்புமணி அணி சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து விட்டார். கடந்த 23ஆம் தேதி பிரதமர் மோடி கலந்து கொண்ட கூட்டத்திலும் அன்புமணி கலந்து கொண்டு மிகக் கடுமையாக திமுக அரசை தாக்கி பேசினார்.
இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் அணி எந்த கூட்டணியில் சேரப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. திமுக அரசு சிறப்பாக செயல்படுகிறது என டாக்டர் ராமதாஸ் பாராட்டி பேசினார். அவர் திமுக கூட்டணிக்கு செல்ல தீவிர முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ராமதாஸ் திமுக பக்கம் போய்விடாமல் என்.டி.ஏ கூட்டணிக்குள் வந்தால்தான் பாமகவின் மொத்த பலமும் கிடைக்கும் என பாஜக நினைக்கிறது. ராமதாஸை அழைத்து வரும் பொறுப்பை இபிஎஸிடம் ஒப்படைத்து இருக்கிறது டெல்லி பாஜக. அன்புமணியை கூட்டணியில் சேர்த்து பாமக, என்.டி.ஏ கூட்டணியில் இணைத்துள்ளதாக அதிமுக சொன்னாலும், ராமதாஸையும் கூட்டணிக்குள் கொண்டு வந்தால்தான் பாமகவின் முழு வாக்கு வாங்கியும் கூட்டணிக்கு மாறும் என்று நம்புகிறது பாஜக டெல்லி தலைமை.
24
ராமதாஸை அழைத்து வர பாஜக அசைண்மெண்ட்
அன்புமணிய கூட்டணிக்குள் சேர்க்கிறபோதே ராமதாஸையும் உள்ளே கொண்டு வந்துவிடுவோம் என்கிற உறுதியை அதிமுக பாஜகவுக்கு கொடுத்துள்ளது. இப்போது ராமதாஸ் எப்போது வருவார்? என்று பியூஸ் கோயல் மூலம் எடப்பாடியிடம் தொடர்ந்து கேட்டு வருகிறது பாஜக. எடப்பாடி தரப்போ பலமுறை ராமதாஸிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால், ராமதாஸ் தரப்போ, ‘‘அன்புமணிக்கு கொடுத்த அதே அளவு தொகுதிகள் வேண்டும். இல்லை என்றால் ராமதாஸ்தான் பாமக என அறிவித்து அவரை முன்னிறுத்தியே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும் என கிடுக்குப்பிடி போட்டு வருகிறது.
34
ராமதாஸிடம் தூதுவிட்ட இபிஎஸ்
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், டாக்டர் ராமதாசை சமாதானப்படுத்த சில முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். சேலம் மாவட்டத்தில் வன்னியர் சமுதாய ஓட்டுகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்த வகையில் டாக்டர் ராமதாஸ் கூட்டணிக்கு வந்துவிட்டால் இரண்டு பேரையும் நாமே சமரசம் செய்து வைத்த மாதிரி ஆகிவிடுமே என்ற அடிப்படையில் அன்புமணியிடம், ‘‘ராமதாஸிடம் நாங்க பேசி பார்க்கிறோம். அவர் என்ன சொல்கிறார் என்பதை அடுத்து நம்ம பாத்துக்கலாம்’’ எனச் சொல்லிவிட்டு எடப்பாடி பழனிசாமி தனக்கு வலதுகரமான சேலம் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் ஆத்தூர் இளங்கோவனை தூது விட்டு இருக்கிறார்.
இளங்கோவனும், டாக்டர் ராமதாஸை சந்திக்க சிலமுறை தைலாபுரம் தோட்டத்துக்கே சென்றுள்ளார். ஆனால் அவரை சந்திக்க டாக்டர் ராமதாஸ் மறுத்துவிட்டார், அவரோடு பேச மறுத்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள். ஆக, டாக்டர் ராமதாஸ், அன்புமணி இடம்பெற்றுள்ள கூட்டணி வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார். அதே நேரம் திமுக அணியில் இடம் பெற வேண்டும். அதற்கு திருமாவளவனை சமாதானப்படுத்த வேண்டும் என்ற முயற்சியிலும் இருக்கிறார்.
ஆனால், திருமாவளவனோ, ‘‘டாக்டர் ராமதாஸ் இங்கே வந்தால் எங்களை விட்டுருங்க. நாங்க திமுக கூட்டணியில் இருந்து போயிடுறோம். எங்களுக்கு எந்த அவசியமும் இல்லை. இப்போதைக்கு நாங்கள் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கிறோம். அடுத்த சட்டமன்றத்தில் எங்களுக்கு எம்எல்ஏ இருந்தாலும் இல்லை என்றாலும் பரவாயில்லை. எங்களுக்கு கொள்கை தான் முக்கியம்’’ என்று திருமா வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார். இதனால் ராமதாஸ் தரப்பு மண்டைக் காய்ச்சலில் தவித்து வருகிறது.