எதிர்க்கட்சி தலைவரின் சுற்றுப்பயணத்தை விமர்சித்த அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எடப்பாடி பழனிசாமி தரமான பதிலடி கொடுத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தீவிர சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் தனது சுற்றுப்பயணத்திற்கு இடைய அந்தந்த பகுதியில் பிரதான தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். உதாரணமாக நெசவாளர்கள், விவசாயிகள், கைவினை கலைஞர்கள் என பலரையும் குழுவாக சந்தித்து அவர்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறார்.
23
பழனிசாமியை விமர்சித்த மா சுப்ரமணியன்
அந்த வகையில் விவசாயிகளுடனான ஆலோசனையில் அவர்கள் பயிர் செய்துள்ள விளை பொருட்களின் ரகம், அதன் விளைச்சல் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டறிந்தார். இதனை விமர்சித்து பேசியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், தன்னை விவசாயியின் மகன் என்று பிரகடனப்படுத்திக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு விவசாயியைப் பார்க்கும் போதும் இது என்ன ரகம், இது எத்தனை நாட்களில் அறுவடைக்கு தயாராகும் என்று கேள்வி கேட்கிறார். குறிப்பாக புளி விவசாயிகளை சந்தித்து இது என்ன புளி, கொட்டை புளியா என்று கேள்வி கேட்கிறார். நல்ல வேலை கொட்டை எடுத்த புளியா, எடுக்காத புளியா என்று கேட்கவில்லை என கருத்து தெரிவித்திருந்தார்.
33
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும்...
அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு பதில் அளித்துள்ள பழனிசாமி, தமிழகத்தில் பல விதமான பொருட்கள் பயிரிடப்பட்டுள்ளன. அதில் ஒவ்வொரு ரகமும், ஒவ்வொரு காலத்தில் பலன் கொடுக்கும் அந்த அடிப்படையில் தான் நீங்கள் பயிரிட்டுள்ள விளை பொருளின் ரகம், அதன் பலன் குறித்து கேள்வி எழுப்புகிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் புளியில் இருந்து எப்படி கொட்டை எடுப்பது என்று செய்து காட்டுகிறோம் அப்போது பாருங்கள் என அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.