என்ன மீறி என் வீட்டுக்காரர் ஓட்டு போட்டுருவாரா? வெலவெலக்க வைக்கும் விஜய் கட்சி பெண் தொண்டர்!

Published : Sep 14, 2025, 11:10 PM IST

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். திருச்சியில் தொடங்கிய பிரச்சாரத்தில் தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. ஒரு பெண் தொண்டரின் பேட்டி வைரலாகி வருகிறது.

PREV
13
தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான அறிவித்திருந்தார். சனிக்கிழமை தோறும் அவர் களத்திற்குச் சென்று பிரச்சாரம் செய்வதாக அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி திருச்சியில் தனது பிரச்சாரப் பயணத்தை ஆரம்பித்தார். முதலில் அரியலூர், குன்னம், பெரம்பலூர் நகரங்களில் அவர் பிரச்சாரம் செய்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், விஜய் பிரச்சாரத்தைக் கேட்க மிக அதிகமான தொண்டர்கள் கூட்டம் கூடியதால் திட்டமிட்டபடி பயணம் மேற்கொள்வது முடியாமல் போனது. இதனால், பெரம்பலூரில் அவர் பேசுவதாக இருந்த திட்டம் கைவிடப்பட்டது. இதற்காக கட்சித் தொண்டர்களிடம் வருத்தம் தெரிவித்து விஜய் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

23
தவெக பிரச்சாரத்திற்குத் திரண்ட கூட்டம்

முதல் முறையாக களத்துக்கு வந்து பிரச்சாரம் செய்த விஜயைப் பார்க்கக் கூடிய கூட்டம் அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. தவெக தொண்டர்களும் ஆதரவாளர்களும் தங்கள் கட்சி நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் விஜய் முதல்வராக வருவார் என்றும் உறுதியாக நம்புகின்றனர். ஆனால், விஜய் கட்சித் தொண்டர்கள் வெறித்தனமாக இருக்கிறார்கள் இது ஓட்டு ஆக மாறாது என பலர் சொல்லி வருகின்றனர்.

பல இளைஞர்கள் விஜய்க்குத்தான் ஓட்டு போடுவோம் என்று சொல்வதையும் தாண்டி, திமுகவை ஒழிப்போம், சீமானை ஒழிப்போம் என அரசியல்வாதி போல ஆவேசமாகப் பேசுகிறார்கள்.

தவெக தொண்டர்களில் அதிக அளவில் பெண்களையும் பார்க்க முடிகிறது. பலர் தங்கள் குடும்பத்துடன் விஜய் பேச்சைக் கேட்க வந்துள்ளனர். அந்தப் பெண்கள் மிகவும் தெளிவாக அரசியல் பேசுகிறார்கள். தங்கள் ஓட்டு விஜய் கட்சிக்குத்தான் என்பதைத் திட்டவட்டமாகக் கூறுகிறார்கள்.

33
தவெக தொண்டரின் வைரல் வீடியோ

இந்நிலையில், விஜய்க்காக கூடிய கூட்டத்தில் உள்ளவர்கள் அளிக்கும் பேட்டி வேறு விதமாக உள்ளது. அந்த வகையில் சனிக்கிழமை திருச்சியில் விஜயைப் பார்க்க வந்த பெண் ஒருவர் பேசிய வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. “நான் சொல்றதைத்தான் என் அம்மா கேப்பாங்க. என் தம்பிங்க கேப்பாங்க. என் வீட்டுக்காரரு கேப்பாரு. அப்புறம் எப்படி அது ஓட்டா மாறாது இருக்கும்? என்ன மீறி எங்க வீட்டுகாரர் வேற கட்சிக்கு ஓட்டு போட்ருவாரா? நாங்க விஜய்க்குதானே ஓட்டு கேப்போம்” என்று உறுதியாகக் கூறுகிறார்.

ஓட்டுக்காக வேறு யாராவது பணம் கொடுக்க வந்தாலும் அதை வாங்கி வைத்துக்கொண்டு, விஜய்க்குதான் ஓட்டு போடுவோம் என்றும் அந்தப் பெண் பேசியுள்ளார். இந்தப் பெண்ணின் தெளிவான பேச்சு சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories