நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பிரச்சார பயணம் திட்டமிடப்பட்டது.
தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல் அரசியல் பயணத்தை துவங்கியுள்ளது. இதன் தொடக்கமாக, நேற்று அவர் திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூரில் மக்களை சந்திக்க திட்டமிட்டிருந்தார்.
25
தமிழக வெற்றிக் கழகம்
ஆனால், விஜய்யின் வருகையை எதிர்நோக்கிய பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் லட்சக்கணக்கில் திரண்டதால், அவரது பயண திட்டம் முழுமையாக நிறைவேறவில்லை. திருச்சி விமான நிலையத்திலிருந்து மரக்கடை பகுதிக்கு செல்ல அவருக்கு 4 மணிநேரத்திற்கும் மேல் ஆனது. அதன் பின் அவர் அரியலூரில் மட்டும் மக்களைச் சந்திக்க முடிந்தது. பெரம்பலூர் பயணம் கூட்ட நெரிசல் காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டது.
35
விஜய் அரசியல்
பெரம்பலூரில் காத்திருந்த மக்கள், பிரச்சாரம் நடக்காததால் ஏமாற்றமடைந்தனர். வெயிலில் பல மணி நேரம் காத்திருந்த மக்கள் சிலர் அதிருப்தி அடைந்தனர். “விஜய் குறைந்தபட்சம் கைகாட்டியிருந்தாலோ, சில நிமிடங்கள் பேசியிருந்தாலோ மகிழ்ச்சி அடைந்திருப்போம்” என பெரம்பலூர் தொண்டர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தவெக வட்டாரங்கள் கூறியதாவது, கூட்ட நெரிசல் காரணமாக பாதுகாப்பு சவால்கள் அதிகரித்ததால், இந்த நிகழ்வைத் தொடர்வது சாத்தியமாகவில்லை. இரவு நேரத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்துவது கடினம் என்பதால், விஜய் எதுவும் பேசாமல் கேரவன் மேடையில் சில நிமிடங்கள் தோன்றி புறப்பட்டுச் சென்றது செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூரில் 2 கிலோமீட்டருக்கும் மேல் மக்கள் இருந்த நிலையில், 1 மணிநேரத்திற்கு மேல் நகர முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாலும், இரவு 1 மணியை தாண்டியதாலும் பெரம்பலூர் மக்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
55
பெரம்பலூர் நிகழ்ச்சி ரத்து
பெரம்பலூரில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் தொண்டர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டாலும், அங்கு திரண்ட மக்களின் வருகை தவெக கட்சிக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது. விரைவில் விஜய் மீண்டும் பெரம்பலூரில் மக்கள் சந்திப்பை நடத்துவார் என்று கூறுகிறார்கள். மேற்கண்ட இந்த சம்பவம், விஜய்யின் அரசியல் பிரவேசம் மீது மக்களிடையே உருவாகி வரும் பேராதரவை வெளிப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.