தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் பிரசாரத்திற்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நடிகர் வடிவேலு ஒரு நிகழ்ச்சி நடத்தினால் கூட தான் அதிகமான கூட்டம் வரும் என்று விமர்சித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது அரசியல் பிரசாரத்தைத் தொடங்கினார். திருச்சி, அரியலூர் என இரு மாவட்டங்களிலும் குவிந்த தொண்டர்கள் கூட்டம் விஜய்யை மட்டுமல்ல தமிழகத்தைச் சேர்ந்த மற்ற அரசியல் கட்சியினரையும் திக்குமுக்காட வைத்துள்ளது. இந்நிலையில் விஜய்க்கு கூடிய கூட்டம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
24
எங்கள் கூட்டத்திற்கு கூட தான் லட்சக்கணக்கில் தொண்டர்கள் வருவார்கள்
அப்போது அவர் கூறுகையில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கூடும் கூட்டம் கொள்கை பிடிப்புள்ள கூட்டம். ஆனால் விஜய்க்கு கூடியதை அப்படி பார்க்க முடியாது. நாங்கள் நடத்திய கூட்டத்தில் கூட லட்சக்கணக்கான தொண்டர்களை கூட்டியுள்ளோம். ஆனால் அப்போதெல்லம் விசிக தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? திருமா தாக்கத்தை ஏற்படுத்துவாரா என யாரும் சொல்லவில்லை. ஆனால் இன்று விஜய்யை அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார், ஆட்சியில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற தோற்றத்தை உருவாக்க ஊடகங்கள் முயற்சிக்கின்றன.
34
திமுகவை வீழ்த்தும் பலம் விஜய்க்கு இல்லை
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை வீழ்த்தும் அளவிற்கு தவெக தலைவர் விஜய்யால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. விஜய்யால் கணிசமான வாக்குகளைப் பெற முடிந்தாலும் இது திமுக கூட்டணியின் வெற்றியை பாதிக்காது. திமுக எதிர்ப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம் என விஜய் கருதுகிறார். திமுக அரசு மீதான விமர்சனங்களுக்கு அக்கட்சி உரிய நேரத்தில் பதில் அளிக்கும்.
திமுக தலைமையை மட்டுமே விஜய் விமர்சித்து பேசி வருவதால் தான் ஏதோ திட்டமிட்டு அஜெண்டாவிற்காக களம் இறக்கி விடப்பட்டுள்ளார் என்று தோன்றுகிறது. விஜய் விவகாரத்தில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.