கே.என்.நேரு கோட்டையில் திமுக.வை பங்கம் செய்த விஜய்..! திருச்சியில் 2 அமைச்சர்கள் இருந்தும் வேஸ்ட் - தளபதி காட்டம்

Published : Sep 13, 2025, 04:39 PM IST

திருச்சி மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் இருந்தும் எந்தவித முன்னேற்றத்தையும் அடையவில்லை என தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டினார். தொடர்ந்து திமுக.வின் நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.

PREV
14
திருச்சியில் பிரசாரத்தை தொடங்கிய விஜய்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தனது பிரசாரத்தை இன்று திருச்சியில் தொடங்கினார். அப்போது பேசிய அவர், “திருச்சியில் தொடங்கிய அனைத்து செயல்களும் திருப்புமுனையாக அமைந்துள்ளன. அந்த காலத்தில் போருக்கு செல்வதற்கு முன்னால் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்வார்கள். அந்த வகையில் உங்களை சந்தித்துவிட்டு தேர்தலை எதிர்கொள்ளலாம் என வந்துள்ளேன்.

24
திமுக.வின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்

காவிரி பாயும் திருச்சியில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. காரிவிரியில் தொடர்ந்து மணல் திருட்டு கட்டுக்கடங்காமல் செல்கிறது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் பல வாக்குறுதிகளைக் கொடுத்ததே அதையெல்லாம் நிறைவேற்றியதா? டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்றீர்களே, மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று சொன்னீர்களே, அரசுப் பணியில் பெண்களுக்கு 40 சதவீதம் கொடுப்பதாக சொன்னீர்களே, வேலை வாய்ப்புகளில் 75 சதவீதம் தமிழர்களுக்கே என்று சொன்னீர்களே சொன்னதையெல்லாம் செய்தீர்களா?

34
2 அமைச்சர்கள் இருந்தும் முன்னேறாத திருச்சி

திருச்சியில் மொத்தமாக 9 தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் பல பிரச்சினை உள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக நாடறிந்த பிரச்சினையாக கிட்னி திருட்டு அமைந்துள்ளது. குறிப்பாக திமுக. எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான மருத்துவமனையில் நடைபெறுகிறது. அதனை தடுக்க முடியவில்லை. திருச்சியில் 2 அமைச்சர்கள் இருந்தும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் இவர்களுக்கா வாக்களிக்க போகிறீர்கள்?

44
தவெக ஆட்சிக்கு வந்தால்..

அனைத்து மகளிருக்கும் ரூ.1000 என்று சொல்லிவிட்டு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படுகிறது. பணம் கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள். இலவசப் பயணம் என்று திட்டத்தைத் தொடங்கிவிட்டு பின்னர் ஓசி பயணம் என்று விமர்சிக்கிறார்கள். இவ்வளவு கேட்வி கேட்கிறாயே நீ என்ன செய்யப் போகிறாய் என்று கேட்கிறீர்களா? பிறரைப் போல் அல்லாமல் பொய்களை தவெக வாக்குறுதிகளாக அளிக்காது. நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகளை மட்டுமே அளிப்போம். அடிப்படை வசதிகளை வழங்குவதில் பெண்கள் பாதுகாப்பு வழங்குவதில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதில் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம்” என்று பேசினார்.

Read more Photos on
click me!

Recommended Stories