Published : Jan 08, 2026, 10:20 AM ISTUpdated : Jan 08, 2026, 10:59 AM IST
ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைப்பதற்கான வாய்ப்பே இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசியல் சூழல் குறித்து அமித்ஷாவிடம் ஆலோசித்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனை தொடர்பாக தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் திமுக ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும். மேலும் தமிழக அரசியல் சூழல் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் எடுத்துரைத்தேன்.
24
அதிமுக கூட்டணியில் இணையும் கட்சிகள்
அண்மையில் அமித்ஷா தமிழகம் வந்திருந்தபோது அவரை என்னால் நேரில் சந்திக்க முடியவில்லை. வேறு கூட்டங்களில் பங்கேற்கவேண்டிய நிலை இருந்தது. அதன் தொடர்ச்சியாக தமிழக அரசியல் சூழல் குறித்து அவரிடம் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டேன். பாட்டாளி மக்கள் கட்சி எங்கள் கூட்டணிக்கு வந்துள்ளதால் எங்களது பலம் உயர்ந்துள்ளது. மேலும் பல கட்சிகள் கூட்டணிக்குள் வர வாய்ப்பு உள்ளது.
34
OPS, சசிகலாவுக்கு இடமில்லை..
ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைப்பதற்கான வாய்ப்பே கிடையாது. உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம் என பாஜக தலைவர்கள் பலமுறை தெரிவித்துவிட்டனர். இவர்கள் இணைப்பு தொடர்பாக நாங்கள் எந்தவித ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை.
தமிழக அரசு அறிவித்துள்ள ஓய்வூதியத் திட்டம் பழைய ஓய்வூதிய திட்டம் கிடையாது. பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களின் பங்களிப்பு கிடையாது. மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஓய்வூதியத் திட்டத்தில் பெயர் மாற்றம் செய்து திமுக அரசு ஊழயிர்களை ஏமாற்றி உள்ளது. திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டின் கடன் சுமை 5.5 லட்சம் கோடி உயர்ந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.