அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் செயல் சர்வாதிகாரமானது என்று குற்றம் சாட்டியுள்ளார். கோடநாடு கொலை வழக்கில் இபிஎஸ் தான் முதல் குற்றவாளி என்றும், தனது நீக்கத்திற்கு எதிராக வழக்கு தொடரப்போவதாகவும் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக பொதுச்செயலாளர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
24
சர்வாதிகாரப் போக்கில் இபிஎஸ்
அதில், எடப்பாடி பழனிசாமி அதிமுகவிற்கு வருவதற்கு முன்பே நான் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவன் நான். கட்சியில் சீனியர் என்ற முறையில் எனக்கு நோட்டீஸாவது அனுப்பியிருக்க வேண்டும். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது, கண்ணீர் சிந்தும் நிலையில் உள்ளேன். சர்வாதிகாரப் போக்கில் யாரை வேண்டுமானாலும் தூக்கி எறியலாம் என்ற நிலையில் இருக்கிறார் இபிஎஸ்.
34
கோடநாடு கொலை வழக்கு A1 குற்றவாளி
அதிமுக விதிகளின் படி என் நீக்கம் செல்லாது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வழக்கறிஞருடன் ஆலோசித்து முடிவு எடுப்பேன். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொருவேன். சசிகலாவிடம் இருந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியை எப்படி பெற்றார் என்பதை நாடறியும். கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமி தான் A1, நான் திமுகவின் Bடீம் அல்ல. யார் Bடீம் என்பதை நாடு அறியும். கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் இபிஎஸ் வாய்திறக்காமல் உள்ளது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த 2019, 2021, உள்ளாட்சித் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. துரோகத்திற்கு ஒரு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமெனில் அதனை தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு தான் கொடுக்க வேண்டும். தற்காலி பொதுச்செயலாளரான இபிஎஸ் 53 ஆண்டுகளாக கட்சியிலிருந்த என்னை நீக்கியுள்ளார் என்றார்.