தேவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தியதற்கான பரிசு தான் அதிமுகவில் இருந்து நீக்கம்..! இறங்கி அடிக்கும் செங்கோட்டையன்

Published : Nov 01, 2025, 11:36 AM IST

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று கோரிய மூத்த தலைவர் செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இது எடப்பாடி பழனிசாமியின் சர்வாதிகாரப் போக்கு என்றும், கொடநாடு வழக்கில் அவர் மவுனமாக இருப்பது ஏன் என்றும் செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார். 

PREV
14

அதிமுகவில் உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பிரிந்து சென்ற தலைவர்களை ஒருங்கிணைத்தால் மட்டுமே அதிமுக வெற்றி பெறும் என அதிமுக மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதற்கான பணியை அதிமுக தலைமை மேற்கொள்ள வேண்டும் என கெடு விதித்திருந்தார். இதனை தொடர்ந்து அதிமுகவில் இருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார். மேலும் அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டனர். 

24

இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை நிகழ்வில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரனோடு இணைந்து செங்கோட்டையன் கலந்து கொண்டார். இதன் தொடர்ந்து சசிகலாவையும் சந்தித்து பேசியிருந்தார். 

இதனால் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி, கட்சி விதிகளை மீறி செயல்பட்ட காரணத்தால் கட்சியில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட ஒட்டுமொத்தமாக செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று தான் நான் குரல் கொடுத்தேன்.

34

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மோசமான தோல்வியை சந்தித்தது. 2 இடத்தில் அதிமுக நான்காவது இடத்திற்கு தள்ளி செல்லப்பட்டது. இந்த நிலையில் எல்லாரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று தான் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரனை சந்தித்து பேசினேன். 

இயக்கம் வலிமை பெற வேண்டும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். தேவர் ஜெயந்தி கலந்து கொண்டதற்கு பரிசு தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளேன். என்னை திமுகவின் பி டீம் என கூறுகிறார். தான் திமுகவின் பி டீம் இல்லை- எடப்பாடி பழனிசாமி தான் ஆ 1ஆக இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டப்படும் கொடநாடு கொலை வழக்கு திமுக அரசின் நடவடிக்கை எடுக்கவில்லை. கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி மவுனமாக இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.

44

தொடர்ந்து பேசிய அவர் அதிமுகவுக்காக 53 ஆண்டுகளாக என்னை அர்ப்பணித்துள்ளேன். என்னை கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை அறிந்து வேதனை அடைகிறேன் மன வருத்தம் அடைகிறேன். கட்சியிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்பாக என்னிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கலாம். சர்வாதிகாரப்போக்குடன் என்னையே கட்சியிலிருந்து நீக்ம் செய்துள்ளார். இபிஎஸ் அதிமுகவிற்கு வருவதற்கு முன்பே நான் எம்எல்ஏவாகவும், மாவட்டச் செயலாளராகவும் இருந்துள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories