என்னோட அனுமதி இல்லாமல் யாரும் தேவையில்லாமல் பேசாதீங்க! இபிஎஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை! என்ன காரணம்?

Published : Apr 18, 2025, 07:42 AM ISTUpdated : Apr 18, 2025, 07:57 AM IST

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், கூட்டணி ஆட்சி குறித்த நிலைப்பாட்டில் குழப்பம் நீடிக்கிறது. 

PREV
15
என்னோட அனுமதி இல்லாமல் யாரும் தேவையில்லாமல் பேசாதீங்க! இபிஎஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை! என்ன காரணம்?
AIADMK BJP Alliance

பாஜகவுடன் கூட்டணி ஆட்சி கிடையாது

Edappadi Palanisamy: வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. இந்நிலையில் சென்னை வந்து சென்ற அமித் ஷா கூட்டணியை  உறுதி செய்துவிட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம் என்றும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று அமித்ஷா கூறவே இல்லை. பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது இபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

25
AIADMK ThambiDurai

கூட்டணியை பிளவுபடுத்த யாரும் முயற்சிக்க வேண்டாம் 

இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை: 1952 முதல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தது இல்லை. தற்போதும் 2026ல் எடப்பாடி பழனிசாமி தனித்தேதான் ஆட்சி அமைப்பாரே தவிர கூட்டணி ஆட்சி கிடையாது என பேசினார். இதனிடையே, கூட்டணி ஆட்சி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஆகிய இருவரும் எடுக்கும் முடிவே இறுதியானது. கூட்டணியை பிளவுபடுத்த யாரும் முயற்சிக்க வேண்டாம் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: தமிழகத்தின் வருங்கால முதல்வர் நயினார்! அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த பாஜக நிர்வாகிகள்!

35
AIADMK

அதிமுக தலைமைக் கழகம் 

இந்நிலையில் கட்சித் தலைமையின் அனுமதி பெறாமல், தலைமைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் எவ்வித கருத்துகளையும் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு கொடுக்க வேண்டாம் என அதிமுக தலைமைக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: கழக நிர்வாகிகளுக்கும், கழகத்தின் மீது பற்று கொண்டுள்ளவர்களுக்கும் அன்பு வேண்டுகோள். கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலந்தொட்டும்; நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு தொடர்ந்தும், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக செயல்பட்டு வருகிறது என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள்.

45
Edappadi Palanisamy

ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம் 

கழகத்தின் முக்கிய முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்தான தகவல்களை, கழகத் தலைமை உரிய நேரத்தில், உரிய முறையில் அவ்வப்போது தெரிவிக்கும். ஆகவே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும், கழகத்தின் மீது பற்று கொண்டுள்ளவர்களும், கழகத்தின் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த எவ்வித கருத்துகளையும், கழகத் தலைமையின் அனுமதி பெறாமல், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் இன்னபிற தகவல் தொடர்பு ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இதையும் படிங்க: டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கு! இபிஎஸ் திடீர் வாபஸ்! என்ன காரணம்? பரபரப்பு தகவல்!

55
EPS order

எடப்பாடி பழனிசாமி

கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories