இரு சக்கர வாகனம் வாங்க மானியம்
ஒரு கால பூசைத்திட்டம் ஏற்கனவே 18ஆயிரம் கோயில்கள் பயனடைந்து வருகிறது. இந்த நிலையில் ரூ.25 கோடி அரசு மானியத்தில் ஒருகால பூசைத் திட்டம் இவ்வாண்டு மேலும் 1,000 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
திருக்கோயில்கள் சார்பில் இவ்வாண்டு 1,000 இணைகளுக்கு ரூ.70,000/- மதிப்பிலான சீர்வரிசைகளுடன் திருமணம் நடத்தி வைக்கப்படும்.
ஒரு கால பூசைத் திட்ட கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள்,கிராமக்கோயில் பூசாரிகள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்துள்ள கிராமக்கோயில் பூசாரிகள், ஆதி திராவிடர் கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் 10ஆயிரம் நபர்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்கதலா 12ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.