பட்டப்பகலில் மனைவி கண்முன்னே கணவன்‌ படுகொலை! தலையை தனியே எடுத்துச் சென்றது ஏன்? பகீர் தகவல்!

Published : Apr 17, 2025, 04:47 PM ISTUpdated : Apr 17, 2025, 04:53 PM IST

தென்காசி மாவட்டத்தில் ரேஷன் கடையில் மனைவி கண்முன்னே கணவர் குத்தாலிங்கம் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பழிக்குப்பழியாக இந்தக் கொலை நடந்ததாகவும், கொலையாளிகள் அவரது தலையை அம்மன் கோவிலில் வீசிச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

PREV
15
பட்டப்பகலில் மனைவி கண்முன்னே கணவன்‌ படுகொலை! தலையை தனியே எடுத்துச் சென்றது ஏன்? பகீர் தகவல்!
tenkasi

Tenkasi Youth brutal murder: தென்காசி மாவட்டம் குற்றாலம் அடுத்துள்ள காசிமேஜர்புரம் பகுதியை சேர்ந்தவர் குத்தாலிங்கம் (35).  கார்மெண்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், கீழப்புலியூரில் உள்ள ரேஷன் கடையில் உணவுப் பொருட்களை வாங்குவதற்காக குத்தாலிங்கம், மனைவி தனலட்சுமி ஆகியோர் நின்றுக்கொண்டிருந்தனர். 

25
youth murder

மனைவி கண்முன்னே கணவர் தலை துண்டித்து படுகொலை

அப்போது அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல்  திடீரென ரேஷன் கடைக்குள் புகுந்து குத்தாலிங்கத்தை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். அலறி கூச்சலிட்ட படியே இதனை தடுக்க முயன்ற மனைவியை கீழே தள்ளிவிட்டனர். மேலும் ஆத்திரம் தீராத அந்த கும்பல் அவரது தலைமை தனியாக எடுத்து சென்று குற்றாலத்தை அடுத்த காசிமேஜர்புரம் அம்மன் கோவில் வீசி சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 

35
police investigation

பழிக்குப்பழி கொலை

காசிமேஜர்புரம் அம்மன் கோவில் முன்பிருந்த குத்தாலிங்கத்தின் தலையையும், கீழப்புலியூர் ரேஷன் கடையில் இருந்த அவரது உடலயைும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பழிக்குப்பழியாக குத்தாலிங்கம் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

45
shocking news

போலீஸ் விசாரணையில் பகீர்

போலீஸ் விசாரணையில், கடந்த 2024 ஆண்டு நவம்பர் மாதம் காசிமேஜர்புரம் அம்மன்கோவில் பகுதியில் நடந்த திருமணத்திற்கு வாழ்த்து பேனர் வைப்பது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பட்டுராஜ் ( 27) என்பவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்திற்கு பழிக்கு பழிவாங்கும் வகையில் குத்தாலிங்கம் கொலை செய்யப்பட்டதும், பட்டுராஜ் கொலை செய்யப்பட்ட அதேப்பகுதியில் குத்தாலிங்கத்தின் துண்டித்த தலையை வைத்து விட்டு மர்மகும்பல் தப்பி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

55
4 people arrest

4 பேர் கைது 

இந்நிலையில் குத்தாலிங்கம் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, காசிமேஜர்புரத்தை சேர்ந்த 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி கண்முன்னே கணவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

Read more Photos on
click me!

Recommended Stories