Published : Apr 17, 2025, 03:22 PM ISTUpdated : Apr 17, 2025, 03:23 PM IST
தமிழ்நாட்டில் 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில், ஏப்ரல் 19ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என்று முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25-ம் தேதி நிறைவடைந்தது. இந்த தேர்வினை 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18, 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில் 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 04-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
25
Postgraduate Teachers Association
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கோரிக்கை
இந்நிலையில் 11 மற்றும் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்துதல் பணிக்கு ஏப்ரல் 19-ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் பொ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில்: தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துதல் பணிகள் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே கிறிஸ்துவ பண்டிகையான புனித வெள்ளி ஏப்ரல் 18-ம் தேதியும், ஈஸ்டர் ஏப்ரல் 20-ம் தேதியும் கொண்டாடப்படவுள்ளன.
35
Exam paper
விடைத்தாள் திருத்துதல் பணிக்கு விடுமுறை அளிக்க வேண்டும்
இதற்கு இடையில் ஏப்ரல் 19-ம் தேதி விடைத்தாள் திருத்துதல் பணி நடைபெறவிருக்கிறது. இதனால் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றும் ஆசிரியர்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாட முடியாத சூழல் நிலவுகிறது. இந்நிலையை ஏப்ரல் 19-ம் தேதி விடைத்தாள் திருத்துதல் பணிக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இது ஆசிரியர்கள் தங்களின் குடும்பத்தினருடன் பண்டிகையை சிறந்த முறையில் கொண்டாட உதவும். மேலும், மற்ற ஆசிரியர்களுக்கும் தொடர் பணிகளுக்கு இடையே சிறு ஓய்வு கிடைக்கும் என தெரிவித்திருந்தனர்.
45
Holiday request
விடைத்தாள் மதிப்பீட்டு முகாமுக்கு விடுமுறை
எனவே ஏப்ரல் 19-ம் தேதி சனிக்கிழமை விடைத்தாள் மதிப்பீட்டு முகாமுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் முதுகலை ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
55
Directorate of Government Examinations
அரசுத் தேர்வுகள் இயக்குநர்
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் லதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மார்ச் 2025 மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு பொதுத்தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியின் போது ஏப்ரல் 18 ( புனித வெள்ளி ) மற்றும் ஏப்ரல் 20 ( Easter ) ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாள் என்பதால் , பார்வையில் காணும் முதுகலை ஆசிரியர்களின் கோரிக்கையினை ஏற்று ஏப்ரல் 19 அன்று Easter Eve முன்னிட்டு அன்றைய தினம் மதிப்பீட்டுப் பணிக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைப்பதால் ஆசிரியர்கள் குஷியில் இருந்து வருகின்றனர்.