கூட்டுறவு வங்கியில் மாணவர்களுக்கு கல்வி கடன்.! அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

Published : Apr 17, 2025, 01:30 PM ISTUpdated : Apr 17, 2025, 01:32 PM IST

தமிழக சட்டப்பேரவையில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா கூட்டுறவு வங்கிக் கடன் தொடர்பாகக் கேள்வி எழுப்பினார். அமைச்சர் பெரியகருப்பன் வேளச்சேரி மற்றும் திருவான்மியூர் கூட்டுறவு வங்கிக் கிளைகளின் கடன் விவரங்களை அளித்தார். கூட்டுறவு வங்கிகளில் கல்விக்கடன் வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

PREV
14
கூட்டுறவு வங்கியில் மாணவர்களுக்கு கல்வி கடன்.! அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்
Tamilnadu assembly

Cooperative Bank Education Loan : தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா, கூட்டுறவு வங்கி எவ்வளவு கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. புதிய கிளைகள் தொடங்க வாய்ப்புள்ளதா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பெரியகருப்பன்,  தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியின் வேளச்சேரி மற்றும் திருவான்மியூர் கிளைகள் தரமணி பகுதியில் தங்களுடைய வங்கிச் சேவைகளை வழங்கி வருகின்றன.

24
thiruvanmiyur cooperative bank

கூட்டுறவு வங்கி கடன்

இதில் வேளச்சேரி கிளையானது ரூ.107 கோடி அளவிற்கு சேமிப்பு மற்றும் வைப்பீடுகளுடன் 10,210 வங்கி கணக்குகளுடன் செயல்படுகிறது. மேலும், இக்கிளையில் 2801 நபர்களுக்கு ரூ.46 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

திருவான்மியூர் கிளையியானது ரூ. 126 கோடி அளவிற்கு சேமிப்பு மற்றும் வைப்பீடுகளுடன் 10,213 கணக்குகள் உள்ளது. இக்கிளையில் 1,950 நபர்களுக்கு ரூ.30 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், சென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வேளச்சேரி கிளையில் ரூ.80 கோடி அளவிற்கு சேமிப்பு மற்றும் வைப்பீடுகளுடன் 11,028 வங்கி கணக்குகள் உள்ளது.

34
Education Loan

தேசியமயாமாக்கப்பட்ட வங்கியில் கல்வி கடன்

இக்கிளைகள் மூலம் 2,616 நபர்களுக்கு 5.43 கோடி வழங்கப்பட்டுள்ளது. கடன் இதேபோல், திருவான்மியூர் கிளையில் ரூ.40 கோடி அளவிற்கு சேமிப்பு மற்றும் வைப்பீடுகளுடன் 8,823 வங்கி கணக்குகள் உள்ளது. இக்கிளைகள் மூலம் 2,510 நபர்களுக்கு ரூ.41 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

தொடர்ந்து கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கல்விக்கடன் பெறுவதால் மாணவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருவதாக கூறி கூட்டுறவு வங்கிகளில் கல்விக்கடன் வழங்க முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

44
Cooperative bank Education Loan

கூட்டுறவு வங்கியில் கல்வி கடன்

அதற்கு பதிலளித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன்,  கல்விக்கடன் வழங்கும் நடைமுறை கூட்டுறவு வங்கியில் இருப்பதாகவும் ஆனால் ஓரளவுக்கு தான் வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.  பொதுமக்களின் சேமிப்பை வைத்து மட்டுமே கடன் வழங்கப்படும் நிலையில் வருங்காலங்களில் வைப்புத் தொகையின் அடிப்படையில் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் பெரியகருப்பன் பதிலளித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories