அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை எதிர்கொள்ள அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து தயாராகி வருகின்றனர். திமுக பொறுத்த வரை கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதோ அதே கட்சிகளுடன் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.