தமிழகத்தில் கொளுத்தும் வெயில்
இந்த நிலையில் வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் மாணவர்கள் கடும் வெயிலிலும் பள்ளிகளுக்கு சென்று வருகிறார்கள். எனவே பள்ளி ஆண்டு இறுதி தேர்வை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று தமிழக அரசு 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி தேர்வை முன் கூட்டியே நடத்தியது.
அந்த வகையில் 09.04.2025 முதல் 21.04.2025 வரை ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஏப்ரல் 17-ம் தேதியை பள்ளியில் தேர்வை முன் கூட்டியே முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.