பெண்களுக்கு ஜாக்பாட்.! கிரைண்டர் வாங்க 5 ஆயிரம் ரூபாய்- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு

Published : Apr 17, 2025, 09:38 AM IST

தமிழக சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானியக் கோரிக்கையில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு உதவும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சத்துணவு மையங்களுக்கு கூடுதல் நிதி, திருநங்கைகளுக்கு தங்கும் விடுதிகள், மகளிருக்கான தொழில் உதவி என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

PREV
15
பெண்களுக்கு ஜாக்பாட்.! கிரைண்டர் வாங்க 5 ஆயிரம் ரூபாய்- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு

 Subsidy for women to buy grinders : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு உதவிடும் வகையில் பல திட்டங்கள் இடம்பெற்றுள்ளது.  
 
1. தமிழ்நாட்டில் பள்ளிகளில் செயல்படும் 43,131 சத்துணவு மையங்களில் பயன்பெறும் 42.71  இலட்சம் மாணவர்களுக்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்டு மானியத் தொகை ஆண்டொன்றுக்கு  61.61 கோடி ரூபாய் கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும்.
    

25
Women welfare

சத்துணவு மையங்களில் எரிவாயு அடுப்பு

2. தமிழ்நாட்டில் செயல்படும் சத்துணவு மையங்களில் 25 பயனாளிகளுக்கு அதிகமாக பயன்பெறும் 25,440 சத்துணவு மையங்களுக்கு 9.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எரிவாயு அடுப்புகள் புதியதாக வழங்கப்படும்.

3. திருநங்கைகளுக்கான ‘’அரண்” எனும் பெயரில் இரண்டு தங்கும் இல்லங்கள், சென்னை மற்றும் மதுரையில் 64 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

35
Subsidy for women to buy grinders

பெண்களுக்கு கிரைண்டர்

4. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, 2000 மகளிருக்கு உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்க மொத்தம் 1 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.   

தமிழ்நாடு அரசின் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ரூபாய் 10,000 அல்லது அதற்கு மேல் மதிப்பிலான உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும்போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 5000/- மானியத் தொகையாக வழங்கப்படும்.

இத்திட்டத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தில் 2000 மகளிருக்கு மொத்தம் 1 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.

45
transgender welfare

பாலூட்டும் தாய்மார்களுக்கு பயிற்சி

5. புகழ்பெற்ற, தரம் வாய்ந்த பயிற்சி நிறுவனங்கள் மூலம் மாவட்ட சமூக நல அலுவலர்கள் மற்றும்  பணியாளர்களுக்கு    1 கோடி ரூபாய் செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும். 

6. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் குறித்தான குறைதீர்ப்பு மற்றும் சேவைகளை பொதுமக்கள் பெறுவதற்கு ஏதுவாக 1.50 கோடி ரூபாய் செலவில் கட்டணமில்லா தொலைபேசி மற்றும் IVRS தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தப்படும். 
     
7.  பச்சிளம் குழந்தைகளின் உடல் நலனை காக்கவும், குறிப்பாக தவறான பாலூட்டும் முறைகளால் ஏற்படும் பச்சிளம் குழந்தைகளின் மரணங்களைத் தவிர்க்கவும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.  

55
Women Empowerment

பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்தில் மீள நடவடிக்கை

8. குழந்தைகளுக்கெதிரான  பாலியல்   குற்ற   வழக்குகளில்   ஏற்படும்   இடர்பாடுகளை   களையவும்,   நிறுவனப்  பராமரிப்பில் உள்ள மற்றும் நிறுவனப் பராமரிப்பில் இருந்து வீடேகும் குழந்தைகளைக் கண்காணிக்கவும் ஒரு மேலாண்மை அலகு  150.00 இலட்சம் ரூபாய் செலவினத்தில்  உருவாக்கப்படும்

9.  பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து, பள்ளி மாணவர்களிடையே நேர்மறையான சூழலை உருவாக்கவும், இளம்பருவத்தினரிடம் உள்ள போதை  பழக்கத்தில் இருந்து அவர்களை மீண்டுவரச் செய்யவும்,  சென்னையில் பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் ‘உரிமை முற்றம்’  செயல்படுத்தப்படும்.

Read more Photos on
click me!

Recommended Stories