Published : Apr 17, 2025, 11:13 AM ISTUpdated : Apr 17, 2025, 11:38 AM IST
திருநெல்வேலி பிரபல இருட்டுக்கடை அல்வா குடும்பத்தில் வரதட்சணை புகார். கடையை தனது பெயரில் எழுதித் தரக் கோரி மிரட்டுவதாக மகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கணவர் வீட்டார் இதை மறுத்துள்ளனர்.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் புகழ்பெற்றது திருநெல்வேலி இருட்டு கடை அல்வா. கடந்த பிப்ரவரி மாதம் கள ஆய்வுக்காக நெல்லை சென்ற முதல்வர் ஸ்டாலின் இருட்டுக்கடைக்கு சென்று அல்வா வாங்கி சாப்பிட்டார். இப்படி புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா குடும்பத்தினர் நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
25
iruttu kadai halwa owner dowry complaint
வரதட்சணை புகார்
திருநெல்வேலி இருட்டுக்கடையை நடத்தி வருபவர் ஹரிசிங், கவிதா தம்பதி. இவரது மகள் ஸ்ரீகனிஷ்கா. இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருடன் வெகு விமர்சியாக திருமணம் நடந்தது. இதுதொடர்பாக புகைப்படம், வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் பல்ராம் சிங் வரதட்சணையாக இருட்டுக்கடையை கேட்பதாக ஸ்ரீகனிஷ்கா நெல்லை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
‘
35
Dowry Harassment
கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு
இதனையடுத்து தனது தாயாருடன் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரீகனிஷ்கா: என் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறார். அவரிடம் என்னை கூட்டிச் சென்று அடிமையாக இருக்க சொல்லி டார்ச்சர் செய்தார். அப்படி செய்யவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு செய்துவிடுவேன் என்று மிரட்டினார். விவாகரத்து கேட்டு மிரட்டுவதாக கூறினார்.
45
dowry case Tamil Nadu
இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்கும் கணவர் குடும்பத்தினர்
கனிஷ்காவின் தாயார் கூறுகையில்: திருமணமாகி ஒரு மாதம்கூட ஆகாத நிலையில், என் மகளை வரதட்சணை கேட்டு அவரது கணவர் கொடுமைப்படுத்தி உள்ளனர். பல்ராம்சிங் வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது திருமணத்திற்கு பின்னர்தான் தெரியவந்தது. இதுகுறித்து வெளியே கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று பல்ராம்சிங், எனது மகளை மிரட்டியுள்ளார். கடும் வேதனையில் இருந்த எனது மகள் கடந்த மாதம் கோவையிலிருந்து நெல்லைக்கு வந்துவிட்டார். மறுநாளே எங்கள் வீட்டுக்கு வந்த பல்ராம்சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் உங்கள் மகளுடன் வாழ வேண்டும் என்றால் இருட்டுக்கடை அல்வா கடையை தனது பெயரில் எழுதி தர வேண்டும் என்று மிரட்டுகின்றனர். இந்த பிரச்சினை குறித்து தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கும் மனு அளித்துள்ளோம் என்றனர்.
55
Tirunelveli Iruttu Kadai
பொய்யான புகார்கள்
இதனை கணவர் வீட்டார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இருட்டுக்கடையை நாங்கள் கேட்பதாக கூறுவது ஆதாரமற்றது. அதிக சொத்துக்களை வைத்துள்ள நாங்கள் ஏன் வரதட்சணை கேட்கப் போகிறோம். எங்கள் சொத்துகளை அபகரிக்கும் நோக்கில் பொய்யான புகார்களைக் கூறுகின்றனர் என தெரிவித்துள்ளார்.