இஸ்லாமியர்களுடன் துணை நிற்பேன்! வக்ஃபு சட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விஜய் வரவேற்பு!

Published : Apr 17, 2025, 04:48 PM IST

வக்ஃபு திருத்த சட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

PREV
14
இஸ்லாமியர்களுடன் துணை நிற்பேன்! வக்ஃபு சட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விஜய் வரவேற்பு!

Vijay welcomes Supreme Court's verdict on the Waqf Amendment  Act: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து புதிய வக்ஃபு திருத்த சட்டம் அமலுக்கு வந்தது. இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளதாகவும், வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
 

24
Waqf Amendment Act

உச்சநீதிமன்றத்தில் 73 வழக்குகள் 

வக்ஃபு திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழ்நாட்டில் திமுக வழக்கு தொடர்ந்து இருந்தது. இதேபோல் தவெக தலைவர் விஜய் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. மேலும் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், விசிக, ஆம் ஆத்மி, மஜ்லிஸ் கட்சி, முஸ்லிம் லீக் கட்சிகள் உள்பட மொத்தம் 73 வழக்குகள் உச்ச்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

இந்த வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். 
மேலும், வக்ஃப் என அறிவிக்கப்பட்ட சொத்துகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் புதிய உறுப்பினர் நியமனமும் செய்யக் கூடாது எனவும் நீதிபதிகள் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். 

வக்ஃப் சட்ட திருத்தத்திற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

34
TVK Vijay, Supreme Court

உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு 

இந்நிலையில், நடிகரும், தவெக தலைவருமான விஜய் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், ''வக்ஃபு திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கெனவே பதியப்பட்ட வக்ஃபு சொத்துகள் மீது எந்தப் புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. 

இஸ்லாமியர்களின் உரிமையான வக்ஃபு வாரியம் தொடர்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது. இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன், தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும் எனத் தீர்க்கமாகத் தெரிவித்துக்கொள்கிறேன். 

44
TVK Vijay, BJP

நெஞ்சார்ந்த நன்றி

பாசிச அணுகுமுறைக்கு எதிராக நாம் தொடங்கிய சட்டப் போராட்டத்தில் நமக்குத் துணையாக இருந்து இந்த உத்தரவைப் பெற்றுத் தந்த மூத்த வழக்கறிஞர் மதிப்பிற்குரிய அபிஷேக் சிங்வி அவர்களுக்கும் அவருடைய வழக்கறிஞர் குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார்.

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்; மே 14 இல் பதவியேற்பு

Read more Photos on
click me!

Recommended Stories