விஜய்க்கு ஆதரவாக களம் இறங்கிய இபிஎஸ்! பிரஸ்மீட்டில் திமுக பிரஷரை எகிற விட்ட அதிமுக!

Published : Oct 15, 2025, 02:18 PM IST

கரூர் தவெக கூட்ட நெரிசலுக்கு அரசின் அலட்சியமே காரணம் என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். அதிமுகவுக்கு மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி கொடுத்தது, பாதுகாப்பு குறைபாடு போன்றவற்றால் 41 பேர் உயிரிழந்ததாக அவர் கூறியுள்ளார்.

PREV
14
எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: ஜனவரியில் அதிமுக கூட்டம் நடத்த கரூர் வேலுச்சாமிபுரம் குறுகிய சாலை என்பதால் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. நீதிமன்றத்துக்கு சென்ற பிறகே எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எங்களுக்கு நிராகரித்த இடத்தை தவெகவிற்கு எதற்காக அரசு கொடுத்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.

24
திட்டமிட்ட சதி

அசம்பாவிதம் ஏற்பட வேண்டும் என்று திட்டமிட்டே வேலுச்சாமிபுரத்தை கொடுத்தார்கள். கரூரில் 500 காவலர்கள் பாதுகாப்பு என ஏடிஜிபி கூறுகிறார். ஆனால் முதலமைச்சர் 660 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக முதலமைச்சர் கூறுகிறார். இதிலேயே முரண்பாடு. இதனால் தான் கரூர் சம்பவத்தில் அரசின் மீது சந்தேகம் எழுகிறது.

34
தவெக தலைவர் விஜய்

தவெக தலைவர் அவர்கள் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் பத்து நிமிடம் பேசியிருப்பார். தவெக தலைவர் விஜய் பேசும்போது செருப்பு வந்து விழுந்தது குறித்து அவர் எதுவுமே சொல்லவில்லை. இந்தக் கூட்டத்துக்கு திமுக அரசு முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் உயிர்ப் பலியைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், இந்த அரசு எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியாகவும் ஆளுங்கட்சிக்கு ஒரு நீதியாகவும்தான் பார்க்கப்படுகிறது. கரூர் கூட்டத்துக்கு முழுமையான பாதுகாப்பை காவல்துறை அளிக்காததாலும், இந்த அரசின் அலட்சியத்தாலும் 41 பேர் உயிரிழந்தனர்.

44
அரசியல் செய்யவில்லை

கரூர் சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேச எங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. நாங்கள் கருத்து கூறியபிறகு முதல்வர் பதிலளிக்க வேண்டும் என பேரவையில் கேட்டோம். கரூர் நெரிசல் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. மக்களுக்காகவே பேசுகிறோம். ஏற்கெனவே தவெக தலைவர் விஜய் திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், நாமக்கலுக்கு பிறகுதான் கரூர் வந்தார். இதனால், ஏற்கெனவே நடந்த கூட்டத்துக்கு எவ்வளவு பேர் வந்தனர் என்பது காவல்துறை, உளவுத் துறை, அரசுக்கும் தெரியும். அதற்கேற்றவாறே இடத்தை ஒதுக்கியிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories