அதேபோல், தீபாவளி முடிந்து வருகிற 21ம் தேதி அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலங்கங்களுக்கு பொது விடுமுறையாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து இந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தீபாவளி பண்டிகைக்கு மூன்று நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நாளில், பெரும்பாலான அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், அரசுப் பணியாளர்கள் தங்களது சொந்த ஊருக்குக் குடும்பத்துடன் செல்வார்கள்.