திமுக 200 தொகுதி ஜெயிச்சுட்டா..! மோடி அரசு தேர்தல் இல்லாமலேயே மாறிவிடும்.. அதிர்ச்சி கொடுக்கும் ஆ ராசா

Published : Oct 13, 2025, 09:39 AM IST

 தமிழக சட்டமன்ற தேர்தலில் 180 முதல் 200 தொகுதிகளில் திமுக வென்றால், நாடாளுமன்ற தேர்தல் இல்லாமலேயே ஒன்றிய அரசு மாறும் என ஆ.ராசா தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறைக்கு அஞ்சாமல் முதல்வர் ஸ்டாலின் செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

PREV
14
தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்த நிலையில் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. திமுகவும் மீண்டும் ஆட்சியை தொடரும் வகையில் திட்டமிட்டு திமுக தொண்டர்களை ஆலோசனைகளை வழங்கி வருகிறது.  சென்னையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, 

மத்தியில் ஒரு ஆட்சியை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை, அந்த ஆட்சி தேர்தல் ஆணையத்தை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறது. 30 வருடங்களாக நான் எம்.பி.யாக இருக்கிறேன். தேர்தல் ஆணையம் என்னென்ன வேலைகளை பார்த்ததோ, அதெல்லாம் நம் கையில் இருந்துச்சு. பூத் ஸ்லிப் நம் கையில், வாக்காளர் பட்டியல் நம் கையில், 

24
தேர்தல் ஆணையத்தில் திருடர்கள்

ஏனென்றால் ஓட்டு போடுறதில் 10 பேர் திருடர்களாக இருப்பார்கள். இதனால் கவனமாக இருக்க வேண்டும் என்பதால் நாம் அந்த வேலையை பார்த்தோம். அப்போது தேர்தல் ஆணையம் ஒழுங்கா இருந்திச்சு. ஆனால் இப்போது தேர்தல் ஆணையத்தில் திருடர்கள் வந்துவிட்டார்கள். நாம் கவனமாக இருக்க வேண்டியிருக்கு. 

இவ்வளவு கவனமாக இருக்க தலைவர் கூறுவதற்கு காரணம் தேர்தல் ஆணையத்தில் திருடர்கள் உள்ளனர். திருட்டு தடுப்பதற்காகத்தான் இவ்வளவு வேலைகள் பார்க்க வேண்டி உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் 130 தொகுதியில் திமுக வெற்றி, கூட்டணியுடன் சேர்த்து 150 தேர்தல் முடிவு வந்தால் அது தமிழ்நாட்டிற்கான தேர்தலாக அமையும்.

34
மாநில கட்சியை உடைத்த பாஜக

நாடாளுமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு காலத்திற்கு மேல இருப்பதால் நான் சொல்கிறேன். இது தமிழகத்திற்கான தேர்தல் அல்ல இந்தியாவிற்கான தேர்தல். சந்திரபாபு நாயுடும் மற்றும் மற்ற மாநிலங்களில் உள்ள கூட்டணி கட்சிகளும் வழிந்து வழிந்து மோடி அமித்ஷாவை ஆதரிக்கிறது. வேறு வழி இல்லை அமலாக்க துறை, வருமானவரித்துறை, சிபிஐ போன்றவர்கள் நெருக்கிறார்கள். 

தெலுங்கு தேசத்தை உருவாக்கியவர் சந்திரசேகர ராவ் தற்போது அவரது குடும்பத்தை இரண்டாக பிரித்துள்ளார்கள், சிவசேனாவை மிகப்பெரிய இயக்கம், அந்த இயக்கத்தை இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்படி அனைத்து கட்சிகளையும் துண்டாடி, துண்டாடி எல்லா மாநில கட்சிகளையும் முடக்குகிறார்கள்.

44
திமுக 200 தொகுதியில் வெற்றி பெறனும்

குடும்பத்தை பிரிப்பது, கட்சியை உடைப்பது, எம்எல்ஏக்களை இழுப்பது இப்படி செய்து தங்களது ஆளுமையை மதவாதத்தை மக்களிடம் கொண்டு செல்கிறார்கள். எனவே தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில்180 முதல் 200 தொகுதிவரை வெற்றி பெற்று விட்டால் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்,  நாடாளுமன்ற தேர்தல் இல்லாமலேயே ஒன்றிய அரசு மாறும். திமுக உள்ளே போகும். நாங்கள் ஏன் செல்கிறோம் என்றால் எல்லோரும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறைக்கு பயப்படுகிறார்கள். 

ஆனால் நாங்கள் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் ஆக திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளார். எங்களது கொள்கையை தள்ளி வைத்துக்கொள்கிறோம் என சொன்னால் 5 லட்சம் கோடியை கொடுப்பதற்கு மோடி தயாராக உள்ளார். ஆனால் நான் மண்டியிட மாட்டேன். இது பெரியார் மணி. அண்ணா மண், கலைஞர் மணி என சொல்லக்கூடிய துணிச்சல் முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமே உள்ளது என ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories