ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் இருமல் மருந்தால் 22 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில், அதன் உரிமையாளர் ரங்கநாதன் சென்னையில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் பணியிடைநீக்கம் அதிகாரிகள் வீடுகளில் சோதனை.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே ஸ்ரீசன் பார்மா என்ற மருந்து உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து 'கோட்ரிப்' என்ற குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய இருமல் மருந்து தயார் செய்யப்பட்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் விநியோகிக்கப்படுகிறது. அந்த வகையில் மத்திய பிரதேசம் மாநிலத்திலும் இந்த மருந்து விநியோகம் செய்யப்பட்டு குழந்தைகளுக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டது.
25
22 குழந்தைகள் பலி
இந்நிலையில் கோடல்ட்ரிப் மருந்தை உட்கொண்டு 22 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தைகளின் மரணத்திற்கு அவர்கள் உட்கொண்ட இருமல் மருந்து தான் காரணம் என்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதனையடுத்து ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.ரங்கநாதன் மீது கொலையில்லாத மரண சம்பவத்தை விளைவித்தல், கலப்பட மருந்து தயாரித்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடிவந்தனர்.
35
உரிமையாளர் ரங்கநாதன் கைது
இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைத்து ரங்கநாதனை சென்னை காவல் துறையினரின் உதவியுடன் மத்திய பிரதேச காவல் துறையினர் அதிரடியாக கைது செய்து செய்தனர். இதில் யாருக்கெல்லாம் தொடர்பு என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது
இந்நிலையில், சென்னையில் ஸ்ரேசன் பார்மா மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.
55
அரசு அதிகாரிகள் வீடுகளில் சோதனை
அதேபோல் மருந்து கம்பெனியை முறையாக கண்காணிக்கவில்லை என மருந்து கட்டுப்பாட்டுத்துறை இயக்குநர் தீபா ஜோசப், இணை இயக்குநர் கார்த்திகேயன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் சென்னை திருவான்மியூரில் உள்ள தீபா ஜோசப் மற்றும் அண்ணாநகரில் உள்ள கார்த்திகேயன் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.