தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. நடிகர் விஜய், திமுக அரசை விமர்சித்ததற்கு, திமுக எம்எல்ஏ கே.பி.பி. சங்கர் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அந்த வகையில் மக்களை சந்திக்கும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தை அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டது. ஆளுங்கட்சியான திமுக சார்பாக ஓரணியில் தமிழகம் என்ற தலைப்பில் வீடு, வீடாக சென்று வாக்காளர்களை திமுகவில் இணைக்கும் பணியை தொடங்கியுள்ளது.
அடுத்தாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இந்த இரு கட்சிகளுக்கும் டப் கொடுக்கும் வகையில் அரசியல் களத்தில் புதிதாக இறங்கியுள்ளார் நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கிய விஜய், செப்டம்பர் மாதம் முதல் தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்க ஒவ்வொரு மாவட்டமாக செல்லவுள்ளார்.
24
ஸ்டாலின் அங்கிள் வெரி ராங்க் அங்கிள்
அந்த வகையில் தனது இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் நடிகர் விஜய் நடத்தினார். இந்த மாநாட்டில் பேசிய விஜய், திமுகவானது பாஜக உடன் ரகசிய கூட்டணி வைத்துள்ளது. ஒரு ரெய்டு வந்தால் போதும் உடனே டெல்லிக்கு போய் ரகசிய மீட்டிங் போடுறாங்க.
ஸ்டாலின் அங்கிள் வெரி ராங்க் அங்கிள் என கிண்டலாக பேசினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கதறிட்டு இருக்காங்க. இப்போ உங்களை அப்பான்னு வேறு சொல்லனுமா! சாரி அங்கிள்.. என்ன இதெல்லாம்.. வெரி வெரி வொர்ஸ்ட் அங்கிள் என விஜய் விமர்சித்து இருந்தார்.
34
விஜய்க்கு பதிலடி கொடுத்த திமுக
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவினர் பல இடங்களில் விஜய்க்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். அதில், "வாட் ப்ரோ; ஓவர் ப்ரோ, அடக்கி வாசிங்க ப்ரோ..." என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் விஜய்யை கடுமையாக தாக்கி திமுக எம்எல்ஏ பேசிய பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வட சென்னை திருவொற்றியூர் தியாகராயபுரம் பகுதியில் சுமார் 60 ஆண்டு காலமாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய கே.பி.பி.சங்கர், நடிகர் விஜய் அரசியலுக்கு தற்போது தான் வந்திருக்கிறார் திரிஷாவோடு சுற்றலாமா.? கீர்த்தி சுரேஷ் உடன் சுத்தலாமா என நினைத்துக் கொண்டிருக்கும் விஜய்க்கு திமுக கட்சியை பற்றி என்ன தெரியும் என கேள்வி எழுப்பினார்.
இதனை தொடர்ந்து கடுமையாக பேசிய எம்எல்ஏ சங்கர், பெற்ற தகப்பன், வளர்த்த தாய், கட்டிய மனைவி பார்த்துக் கொள்ள முடியாத விஜய் தன்னை நம்பி வரும் மக்களை எப்படி காப்பார் என விமர்சித்தார். அங்கிள் என்று கூறிய விஜய் தனது தந்தையுடன் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் கைகட்டி நின்று கொண்டிருந்ததை மறந்து விட்டார் போல என கூறிய எம்எல்ஏ சங்கர்,
ஜெயலலிதா போல் தற்போதைய முதல்வர் மு க ஸ்டாலின் இருந்திருந்தால் விஜயின் துணியை உருவி ஓட விட்டிருப்பார். ஆனால் எதையும் மறக்கும் குணம் கொண்டவர் முதல்வர் என்பதால் இதையெல்லாம் பெரிதாக கண்டு கொள்ளவில்லை என கே.பி.பி.சங்கர் ஆவசேமாக பேசினார்.