பள்ளிக்கல்வித்துறையே இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஆசிரியர்களின் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்துள்ள பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கையை விட கூடுதலாக கணக்கு காண்பித்து, ஆசிரியர்கள் பணியில் இருந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு, வட்டார கல்வி அலுவலர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் கடந்த ஆண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதேபோன்று அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் முறைகேடு நடைபெற்றது கண்டு பிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
25
போலி கல்வி சான்றிதழ்கள்
இந்நிலையில் தற்போது மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பொதுவாக அரசு துறைகளில் யாராவது ஒருவர் புதிதாக அரசு பணியில் நேர்ந்தால், அவருடைய அனைத்து வகை கல்வி சான்றிதழ்களும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி இது உண்மைதானா என்பது ஆய்வுக்கு உட்படுத்தப்படும் . அந்த ஆய்வில் சான்றிதழ்கள் அனைத்தும் உண்மை என்று தெரிய வந்த பிறகே அவர் அரசு ஊழியராக அங்கீகாரம் செய்யப்படுவார்.
35
பள்ளிக்கல்வித்துறை
அதுவே, போலி சான்றிதழ்கள் என்று தெரிய வந்தால், உடனடியாக அவர் பணி நீக்கம் செய்யப்படுகிறார். அதுமட்டுமல்லாமல் அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட சம்பள பணத்தை பிடித்தம் செய்வதற்கும் சம்மந்தப்பட்ட துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், அரசு பணிகளில் புதிதாக சேரக்கூடியவர்களின் கல்விச் சான்றிதழ்கள் உடனுக்குடன் அதன் உண்மை தன்மையை பரிசோதனை செய்யாததன் காரணமாக, பலர் ஆண்டு கணக்கில் போலிச் சான்றிதழ்களை கொடுத்து பணிபுரிவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் போலி கல்விச்சான்றிதழ்களை கொடுத்து பலர் ஆசிரியர்களாகவும், பிற ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர் என்று பள்ளிக்கல்வித்துறையே தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட காலமாக அவர்களுடைய கல்வி சான்றிதழ்கள் அனைத்தும் அதன் உண்மை தன்மையை ஆய்வுக்கு உட்படுத்தாமல் இருக்கிறது என்ற தகவலையும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. எனவே உடனடியாக இதுவரை கல்விச்சான்றிதழின் உண்மை தன்மையை ஆய்வுக்கு உட்படத்தாமல் இருக்கக்கூடிய அனைத்து சான்றிதழ்களையும் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
55
அனைத்து ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
இது தொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: பள்ளிக் கல்வித் துறையில் ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 10-ஆம் வகுப்பு , 12-ஆம் வகுப்பு மற்றும் ஆசிரியர் கல்விப் பட்டய சான்றுக்கான உண்மை தன்மை பெறாமல் உள்ளார்கள் என்பது தெரிய வருகிறது. எனவே 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைவரும் உண்மை தன்மை பெற்று இருத்தல் அவசியம் என கேட்டு கொள்ளபடுகிறது. 2025 - க்குள் அனைத்து ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் உண்மைத் தன்மை பெற்றதை எங்கள் அலுவலகதிற்கு அறிக்கையாக தர வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.