செப்டம்பர் மாதத்தில் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வெளியூர் பயணங்களுக்கு திட்டமிடலாம். போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இயந்திரங்களுக்கு இணையாக ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு சற்று இளைப்பாறுவது விடுமுறை நாட்களில் தான், அதனால் தான் மற்ற வார நாட்களில் புத்துணர்ச்சியை வேலை செய்ய முடியும். அந்த வகையில் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை கிடைத்தால் நிம்மதியாக ஓய்வெடுப்பார்கள் அதுவும் தொடர்ந்து 2 அல்லது 3 நாட்கள் விடுமுறை கிடைத்தால் கேட்கவா வேண்டும் கொண்டாட்டம் தான்.
வெளியூர்களுக்கு பயணம், உறவினர்கள் வீட்டிற்கு பயணம் என செல்வார்கள். இந்த நிலையில் மீண்டும் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வரவுள்ள நிலையில் மாணவர்களும், அரசு ஊழியர்களும் வெளியூர் பயண திட்டத்திற்கு தற்போதே திட்டமிடலாம்.
24
மாணவர்களுக்கு ஏமாற்றம் கொடுத்த ஜூன், ஜூலை
பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் திறந்த நிலையில், அந்த மாதம் முழுவதும் விடுமுறை நாட்கள் இல்லாமல் ஏமாற்றமாகவே அமைந்தது. ஜூலை மாதமாவது கை கொடுக்குமா என்று பார்த்தால் அந்த மாதமும் பெரிய அளவில் விடுமுறை கிடைக்காத மாதமாக இருந்தது.
இந்த நிலையில் தான் ஆகஸ்ட் மாதம் விடுமுறையை கொட்டிக்கொடுக்கும் மாதமாக அமைந்தது. அந்த வகையில் வரலட்சுமி நோன்பு, சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி விழா என தொடர் விடுமுறை கிடைத்தது. அடுத்ததாக விநாயகர் சதுர்த்தியும் வருகிற புதன் கிழமை அதாவது 27 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளதையொட்டி விடுமுறை கிடைக்கவுள்ளது.
34
ஆகஸ்ட்டில் கொண்டாடிய மாணவர்கள்
இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் குஷியில் உள்ள நிலையில் செப்டம்பர் மாதத்திலும் தொடர் விடுமுறை நாட்கள் வரவுள்ளது. அந்த வகையில் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி மிலாடி நபி விழா கொண்டாடப்படவுள்ளது.
இந்த விழாவையொட்டி தமிழகத்தில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு வார இறுதி விடுமுறை நாட்களாக அமைந்துள்ளது. எனவே தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளதால் தற்போதே வெளியூர் பயணங்களுக்கு திட்டமிடலாம்.
ஏற்கனவே பெரும்பாலான ரயில்களில் முன்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் சிறப்பு ரயில் இயக்கப்படுமா என பொதுமக்கள் காத்துள்ளனர். அதே நேரத்தில் செப்டம்பர் 5,6 மற்றும் 7 ஆம் தேதி விடுமுறைக்காக தமிழக அரசின் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்படவுள்ளது.
எனவே வெளியூர் பயணம் செல்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் செப்டம்பர் மாதம் வார விடுமுறையை தவித்து வேறு எந்த விடுமுறை நாட்களும் இல்லாத நிலை உள்ளது. இதனால் செப்டம்பர் மாத காலண்டரை பார்த்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.