டூப் போட்டு அறிக்கை வெளியிட்ட பழனிசாமி..! பரிதாப நிலையில் அதிமுக.. அமைச்சர் விமர்சனம்

Published : Jan 17, 2026, 06:48 PM IST

ஆண்களுக்கும் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம், பெண்களுக ரூ.2000 உதவித்தொகை உள்ளிட்ட அறிவிப்புகளை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்த நிலையில் இது திமுகவின் திட்டங்களை காப்பி அடிக்கும் செயல் என அமைச்சர் ராஜா விமர்சித்துள்ளார்.

PREV
13
அறிவாலயம் வாசலில் குத்தவைத்து காத்திருக்கும் அதிமுகவினர்..

முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆர் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு அக்கட்சி தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன் தொடர்ச்சியாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மகளிருக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.2000ஆக உயர்த்தப்படும், அரசுப் பேருந்துகளில் ஆண்களுக்கும் இலவசப் பயணம் உள்ளிட்ட சில முக்கிய வாக்குறுதிகளை வழங்கினார்.

இந்நிலையில் தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “ஒவ்வொரு தேர்தலிலும் கதாநாயகனாக திகழும் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாவதற்கு முன்பே அறிவாலயம் வாசலில் குத்த வைத்து காத்திருக்கும் அதிமுகவினர், திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியானதும் முதல் காப்பியை வாங்கிக்கொண்டு, அதை அப்படியே காப்பியடித்து அதிமுகவின் தேர்தல் அறிக்கையாக வெளியிடுவது தான் வழக்கமான நடைமுறை. இந்த முறை, அதில் விசித்திர மாற்றத்தை செய்து தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள்.

23
டூப் போட்டு அறிக்கை வெளியிடும் பரிதாபத்தில் அதிமுக

கடந்த ஐந்து ஆண்டுகளாக மாண்புமிகு திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு "டூப்" போட்டு அறிக்கை வெளியிட வேண்டிய அளவுக்கு அதிமுகவின் நிலைமை பரிதாபமாக போய்விட்டது !

2021ல் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியான போது, தமிழ்நாட்டின் நிதி நிலைமை சரியில்லை எனவே இதையெல்லாம் நிறைவேற்றவே முடியாது என்றார் திரு.பழனிசாமி. ஆனால், தமிழ்நாட்டை அனைத்து தளங்களிலும் முன்னேற்றியதுடன், எதையெல்லாம் திமுகவால் செய்ய முடியாது என்று எதிர்கட்சி தலைவர் சொன்னாரோ, அதை எல்லாம் நம் திராவிட நாயகன் மாண்புமிகு முதலமைச்சர் வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டிவிட்டார்.

33
திமுகவின் தேர்தல் அறிக்கையை காப்பி எடுக்கலாம்

இப்போது புதிதாக எதுவும் சிந்திக்க திராணி இல்லாமல் திமுக அரசின் பழைய திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் அறிவிப்புகளை வெளியிடுகிறது அதிமுக.

அவர்கள் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் உள்ளவர்களின் திறமை மீது நம்பிக்கை இல்லாமல், திமுக அரசின் சாதனை திட்டங்களை ரோல் மாடலாகக் கொண்டு, அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இது உங்களுக்கு செட் ஆகல சார். வெயிட் பண்ணுங்க. உங்க மூளையை இப்ப கசக்க வேண்டாம். எப்போதும் போல இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் திமுக தேர்தல் அறிக்கை வந்த பிறகு, அதை முழுமையாக உங்க பழைய ஜெராக்ஸ் மிஷினில் காப்பி எடுக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories