இதனை அறிந்த செல்வக்குமார் தனது கள்ளக்காதலிகள் மற்றும் அவரது நண்பர்களை கண்டித்தது மட்டுமல்லாமல் அவர்களுடன் தகராறு செய்தார். இதனால் ரீனா, ரஜிதா இருவரும் செல்வக்குமாரை, திரிசூலத்தில் உள்ள பூங்காவுக்கு நைசாக பேசி வரழைத்தனர். அப்போது அங்கு மறைந்து இருந்த 17 வயது சிறுவன் மற்றும் அவரது கூட்டாளியான அலெக்ஸ் ஆகியோர் செல்வக்குமாரை சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்தார். மேலும் ஆத்திரம் அடங்காததால் மர்ம மர்ம உறுப்பையும் அறுத்தனர். செல்வக்குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த 4 பேரும் அங்கிருந்து தப்பித்தனர்.இதுபற்றி உடனே பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செல்வக்குமாரை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரீனா, ரஜிதா மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.