அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இறுதியாக வெற்றி பெறும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளையின் உரிமையாளர்களுக்கு கார், டிராக்டர், மோட்டார் சைக்கிள் போன்றவை பரிசாக வழங்கப்பட உள்ளன.
இதனிடையே வீரர்கள், பொதுமக்கள் மத்தியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். அதே நேரத்தில், உங்கள் அனைவருக்கும் என்னுடைய பொங்கல் வாழ்த்துகளையும், புத்தாண்டு வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த மதுரை மண் என்பது, வீரம் விளைந்த மண்ணாகும். அப்படிப்பட்ட இந்த மண்ணின் வீரவிளையாட்டான உலகப் புகழ் பெற்றிருக்கக்கூடிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப் பார்க்கும்போது நமக்கெல்லாம் வீரம் வருகிறது. அதனை அடக்குகின்ற காளையர்களை பார்க்கின்றபோது நம்முடைய தமிழ் மண்ணுக்கு பெருமையாக இருக்கிறது.