அரசு வேலையில் மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை..? முதல்வரின் ஏமாற்று அறிவிப்பு.. அண்ணாமலை விமர்சனம்

Published : Jan 17, 2026, 05:03 PM IST

ஜல்லிக்கட்டுப் போட்டியில் சிறப்பாக செயல்படும் மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.a

PREV
12
முதல்வரின் ஏமாற்று அறிவிப்பு

பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில், ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகையாக, மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ஆகா, தமிழ்ப் பண்பாட்டை ஊக்குவிக்கப் போகிறார் என்று அனைவரும் நினைத்தோம். ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. இதுவரை, ஒரு ரூபாய் கூடக் கொடுக்கவில்லை. இந்த நிலையில் இன்று, மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்கப் போகிறோம் என்று மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

22
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகை..

ஏற்கனவே, ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பவர்கள் ஒவ்வொருவருக்கும், இந்த ஐந்து ஆண்டுகளில், கொடுக்கப்பட வேண்டிய சுமார் ₹60,000 ஊக்கத்தொகை எப்போது வருமென்று தெரியவில்லை. இப்படி தொடர்ந்து வெற்று வாக்குறுதிகள் கொடுத்து யாரை ஏமாற்றலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் என்பது தெரியவில்லை.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பிடித்த "பேரு பெத்த பேரு, தாக நீலு லேது" என்ற தெலுங்குப் பழமொழி, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு முழுமையாகப் பொருந்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories