தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். துணை ஜனாதிபதி ராஜினாமா குறித்தும், திமுக அரசு மீதான விமர்சனங்களையும் அவர் முன்வைத்தார்.
தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அண்ணாமலை செல்லும் இடமெல்லாம் பாஜக கட்சியினரும் பொதுமக்களும் அவருக்கு சிறப்பாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உலக பிரசித்திப்பெற்ற காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வருகை தந்ததை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
24
ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்
பின்னர் காமாட்சியம்பாளை மனமுருகி வேண்டி அண்ணாமலை சாமி தரிசனம் செய்த பிறகு அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்களும் புகைப்படங்களும் வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது. இதனையடுத்து அண்ணாமலையின் வருகையை அறிந்த பக்தர்கள் பலரும் அண்ணாமலை சூழ்ந்து கொண்டு போட்டா போட்டிக்கொண்டு அவருடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
34
ஜெகதீப் தன்கர்
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை: துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கரின் அவர்கள் நாட்டிற்காக சிறப்பாக பணிபுரிந்து வந்தார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மார்ச் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். உடல் ஆரோக்கியத்தை மையப்படுத்தி நேற்று இரவு ராஜினாமா செய்துள்ளார். அவர் உடல்நிலை சரியாகி குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.
சென்னையில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய மக்கள் நீதி மய்யம் பெண் நிர்வாகி தாக்குதலில் ஒரு சார்பாக விசாரணை நடத்தி ஆட்டோ ஓட்டுநரை கைது செய்துள்ளனர். விசாரணையில் பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் நீதி கிடைக்க வேண்டும். தேர்தல் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என தெளிவாக இருக்கின்றனர். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஒவ்வொரு நாளும் திமுக கட்சி மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. கூட்டணி கட்சி உடைவதற்கான அறிகுறிகள் தெரிகிறது. 2026 தேர்தலில் திமுகவிற்கு வரலாற்றில் மிக மோசமான தேர்தல் ஆக இருக்கும். திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு, நாட்டின் வளர்ச்சியும் கோட்டை விட்டுவிட்டனர் என அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.