விக்ரவாண்டியில் பிரம்மாண்ட வரவேற்பு; மேடையில் விஜயை மறைமுகமாக தாக்கிய உதயநிதி ஸ்டாலின்!

First Published | Nov 5, 2024, 9:14 PM IST

Udhayanidhi Stalin : விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் திருவள்ளுவர் சிலையை இன்று மாலை திறந்து வைத்து பேசினார் உதயநிதி ஸ்டாலின் 
 

Udhayanidhi

அண்மையில் பிரபல நடிகரும், அரசியல் தலைவருமான தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று முடிந்தது. தொடர்ச்சியாக டிசம்பர் மாத இறுதியில் இருந்து சூறாவளி சுற்றுப்பயணத்தை தமிழகம் முழுவதும் தளபதி விஜய் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநில மாநாட்டில் நேரடியாகவே திராவிட முன்னேற்ற கழகத்தை தாக்கி பேசியிருந்தார் தளபதி விஜய்.

கோவை மக்களுக்கு அடுத்தடுத்து குட்நியூஸ்! 3500 பேருக்கு வேலை ரெடி! மாஸ் காட்டும் முதல்வர் ஸ்டாலின்!

TVK Vijay

அது மட்டுமில்லாமல் தளபதி விஜயின் பேச்சுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்டவர்கள் கடும் கண்டனத்தை முன் வைத்தனர். அதே நேரம் பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் மற்றும் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தளபதி விஜயின் திராவிட முன்னேற்றக் கழக எதிர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

2026 election

இந்த சூழலில் இன்று அக்டோபர் மாதம் 5ம் தேதி விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணெய்நல்லூரில் அமைக்கப்பட்டிருக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவசிலையை இன்று மாலை திறந்து வைத்தார் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். அதை தொடர்ந்து பேசிய அவர் இப்போதிலிருந்து 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் பணிகளையும், பிரச்சாரத்தையும் நாம் தொடங்குவோம். திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காக அறிவித்திருக்கும் அனைத்து திட்டங்களையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

Udhayanidhi Stalin

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் நமது ஆட்சியினால் பயனடைந்த யாரோ ஒருவர் இருப்பார். அவரை தொடர்பு கொண்டு இந்த பிரச்சாரத்தை பெரிய அளவில் தொடங்க வேண்டும். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் நம்மை எதிர்த்து யார் வந்தாலும், யாருடன் யார் கூட்டணி சேர்ந்தாலும், எதிர்ப்பு என்பது எந்த திசையில் இருந்து வந்தாலும் அது டெல்லியோ அல்லது லோகலோ எங்கிருந்து நமக்கு சவால்கள் வந்தாலும் அதை முறியடித்து திராவிட முன்னேற்ற கழகம் தான் 2026 ஆம் ஆண்டில் வெற்றி பெற வேண்டும் என்று கூறி சூசகமாக பாஜகவையும் தளபதி விஜய்யையும் சாடி பேசினார் உதயநிதி.

ஒரே இடத்தில் படிக்கவும் செய்யலாம்.! வேலையும் பார்க்கலாம்.! சூப்பர் திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு

Latest Videos

click me!