School Leave: பள்ளிகளுக்கு நாளை விடுமுறை! வெளியான குட்நியூஸ்!

First Published | Nov 5, 2024, 7:26 PM IST

School Leave: சிக்கல் சிங்காரவேலர் கோவிலின் தேரோட்டம் மற்றும் வேல் வாங்கும் நிகழ்வை முன்னிட்டு நாகை மற்றும் திருமருகல் ஒன்றியப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு பதிலாக நவம்பர் 23ம் தேதி பள்ளிகள் செயல்படும்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அதாவது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். 

இந்நிலையில் சிக்கல் சிங்காரவேலர் சன்னதி மிகப்பழமை வாய்ந்த கோயிலாகும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிக்கல் நவனீதஸ்வரர் கோவில் என்பது இதன் மூல பெயர். அதில் சிங்காரவேலன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலின் தல வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. இந்த கோயில் ஆச்சர்யமான அமைப்பாக முருக பெருமான் ஆலயத்தில் சிவன் மற்றும் விஷ்ணு பெருமான் இருவரும் இங்கே அமைந்து அருள் பாலிக்கின்றனர்.

இதையும் படிங்க: School Holiday: பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை! இனி அடுத்த வாரம் தான் ஸ்கூல்! என்ன காரணம் தெரியுமா?

Latest Videos


அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத முருகனின் ஏழாவது படைவீடாகும். பழைமை வாய்ந்த இக்கோயிலில் சிங்காரவேலவர் வீற்றிருக்கும் சந்நிதி தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். இந்த தலத்தில் எழுந்தருளும் சிக்கல் சிங்காரவேலவர், அன்னை வேல்நெடுங்கன்னியிடம் வேல் வாங்கிக்கொண்டு திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அதாவது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். 

இதையும் படிங்க:  வேற லெவில் பாம்பன் புதிய தூக்குபாலம்! லிப்ட் வசதியுடன் செங்குத்துப் பாலம்! கடலிலேயே இரண்டு மாடி கட்டிடம்!

அதன்படி வரலாற்று சிறப்புமிக்க இவ்வாலயத்தின் தேரோட்டம் மற்றும் வேல் வாங்கும் நிகழ்வை முன்னிட்டு நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 23ம் தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாட்களாக அறிவிக்கப்படுவதாக நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். 

click me!