School Holiday: பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை! இனி அடுத்த வாரம் தான் ஸ்கூல்! என்ன காரணம் தெரியுமா?

First Published | Nov 5, 2024, 4:25 PM IST

தனியார் பள்ளியில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதை அடுத்து மாணவிகள் மயக்கம் அடைந்த சம்பவம் தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு நடத்தியும், இதுவரை காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.

சென்னை திருவொற்றியூரில் கிராம தெரு பகுதியில் உள்ள விக்டரி என்ற தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடத்தின் 3-வது தளத்தில் மாணவர்கள் வகுப்பறை எதிர் தளத்தில் ஆய்வுக்கூடமும்  செயல்பட்டு வருகிறது. 

கடந்த மாதம் 25ம் தேதி வழக்கம் போல ஆசிரியர்கள் பாடம் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென பள்ளி மாணவிகள் கண் எரிச்சல், வாந்தி மயக்கம் ஏற்பட்டு அடுத்தடுத்து மயங்கினர். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனே பள்ளி மாணவர்களை அவசரம் அவசரமாக வெளியேற்றினர். இந்த விஷயத்தை அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் அலறி கூச்சலிட்டப்படியே பள்ளி முன் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினர். 

இதையும் படிங்க: Southern Districts Heavy Rain: தென் மாவட்டங்களில் இன்று தரமான சம்பவம் செய்யப்போகுதாம் மழை! வானிலை மையம் அலர்ட்

Tap to resize

இதன் காரணமாக, கடந்த சில நாட்களாக அந்த தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளியில் உள்ள ஆய்வுக்கூடத்தை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனால் தற்போது வரை ஆய்வுக்கூடத்தில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டுள்ளதை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், தீபாவளி விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது. ஆனால் ரசாயன வாயு கசிவு குறித்து மாவட்ட கல்வி துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறையிடமிருந்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் ஏதும் கூறவில்லை என்று கூறி பிள்ளைகளின் பெற்றோர்கள் ஏராளமானோர் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென 9 மாணவிகள் மயக்கம் அடைந்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையும் படிங்க:  வேற லெவில் பாம்பன் புதிய தூக்குபாலம்! லிப்ட் வசதியுடன் செங்குத்துப் பாலம்! கடலிலேயே இரண்டு மாடி கட்டிடம்!

இதனால் பெற்றோர்கள் அலறி கூச்சலிட்ட படியே தங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றனர். மயக்கம் ஏற்பட்ட மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம்  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இந்நிலையில், திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயு கசிவு தொடர்பாக மாசு கட்டுபாட்டு வாரியம் இன்று ஆய்வு நடத்தியது. நவீன சாதனங்களைக் கொண்டு காற்றில் இருக்கக்கூடிய நச்சுதன்மை, வாயுக்களின் தரம் குறித்து பரிசோதனை நடத்தப்பட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்த முதற்கட்ட அறிக்கையில் வாயு கசிவுக்கான எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை. இதனிடையே, வாயு கசிவு ஏற்பட்ட திருவொற்றியூர் தனியார் பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!