மின்சாரம் வாரியம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.! ஒரே கிளிக் போதும்.!

First Published | Nov 5, 2024, 2:35 PM IST

மின்சார வயர்கள் வீடுகளுக்கு மேலாகவும், நிலத்தின் மேலாகவும் செல்வதால் ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்க்க, TNEB புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. வீட்டின் மேலே அல்லது நிலத்தில் செல்லும் மின்கம்பங்களை மாற்றி அமைக்க https://app1.tangedco.org/nsconline/mobval.xhtml?apl=DCW3 என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

TNEB

மின்சாரமும் தேவையும்

நவீன காலத்திற்கு ஏற்ப மக்களும் தங்களை மாற்றிக்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மின்சாரம் இல்லாமல் ஒரு வேளையும் செய்ய முடியாத நிலைக்கு வந்துவிட்டனர். சமையல் செய்வது முதல் ரயில்களை இயக்குவது வரை மின்சாரம் முக்கிய தேவையாக உள்ளது.  அந்த அளவிற்கு மக்களின் வாழ்வோடு ஒன்றி போய்விட்டது மின்சாரம். எனவே ஒரு நிமிடம் மின்சாரம் நின்றால் கூட மக்களை திக்குமுக்காட வைத்து விடும். அடுத்த நொடியே மின்சார வாரியத்திற்கு போன் செய்து எப்போது கரண்ட் வரும் என கேட்கும் நிலை உள்ளது. 

வீட்டின் மேல் மின்சார வயர்கள்

இந்தநிலையில் வீடுகளுக்கு வீடு மின்சாரம் தற்போது உள்ளது. எனவே மின்சார வயர்கள் வீடுகளுக்கு மேலாகவும், நிலத்தின் மேலாகவும் மின்கம்பங்களின் வயர்கள்செல்லும், இதனால் வீட்டின் மொட்டை மாடியில் உள்ள வயர்கள் மீது தெரியாமல் கை வைத்தால் போதும் ஷாக் அடித்தால் உயிர் கூட போகும் நிலை உள்ளது. எனவே வீட்டின் மேலாகவும், நிலத்தின் மேலாகவும் செல்லும் மின் வயர்களை பாதுகாப்பாக வேறு பக்கம் கொண்டு செல்ல தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது.

Latest Videos


விண்ணப்பிக்க வேண்டுகோள்

அந்த வகையில் வீட்டின் மேலே செல்லும் மின் கம்பிகளை, வீட்டு மனை / நிலத்தில் உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்க, இணைய வழியில் விண்ணப்பியுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைய முகவரி: https://app1.tangedco.org/nsconline/mobval.xhtml?apl=DCW3 அறிவித்துள்ளது. இதன் படி வீட்டிற்கு அருகே மின்சார வயர்கள் ஆபத்தான முறையில் செல்வதாக இந்த இணையதள முகவரியில் பதிவு செய்தால் மின்சாரத்துறை ஊழியர்கள் உடனடியாக மாற்று வழியில் மின்வயர்களை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!