stalin old photo
தமிழக அரசியலில் பல ஆண்டு காலமாக மக்களுக்காக சேவையாற்றியவர், வட்ட பொறுப்பாளராக தனது அரசியலில் பயணத்தை தொடங்கி தனது அதீர உழைப்பால் அக்கட்சியின் தலைவராகவே பொறுப்பேற்றுள்ளார். தற்போது 2 கோடி தொண்டர்களின் தலைவராக உள்ளார். இவரது செயல்பாட்டால் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களே திரும்பி பார்த்து வருகிறது. தமிழக மக்களுக்காக செயல்படுத்திய திட்டங்களை மற்ற மாநிலங்களும் காப்பி அடித்து செயல்படுத்தி வருகிறது. எனவே யார் அந்த அரசியல் தலைவர் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அது வேறு யாரும் இல்லை நம்ம தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தான், தனது 14-வது வயதிலேயே அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிவிட்டார். தனது நண்பர்களோடு இணைந்து கோபாலபுரம் பகுதியில் இளைஞர் திமுக என்ற அமைப்பை ஏற்படுத்தி திமுக மூத்த தலைவர்களின் பிறந்தநாளையொட்டி போட்டிகள் நடத்துவது, பரிசுகள் வழங்குவது என சமூகப்பணிகளில் ஆர்வமாக ஈடுபட்டார். பல ஆண்டுகளுக்கு பிறகு 1968ஆம் ஆண்டில் திமுகவில் முதல் கட்சிப்பதவியாக சென்னை 75-வது வட்ட பொறுப்பாளராக பதவி வழங்கப்பட்டது.
stalin old photo
இதனையடுத்து தீவிர அரசியலில் களம் இறங்கிவரை நெருக்கடி நிலையின் போது 1976-ம் ஆண்டு `மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் ஓராண்டுக்காலம் அடைக்கப்பட்டார். கால ஓட்டத்தின் கீழ் திமுகவின் மாநில இளைஞர் அணி செயலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. அடுத்தாக திமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்ததவர், துணை முதலமைச்சராகவும் 2009-ம் ஆண்டு பொறுப்பேற்றார். அதே காலகட்டத்தில் திமுகவின் பொருளாளர் பதவியையும் ஸ்டாலின் அலங்கரித்தார்.
இதனையடுத்து ஆட்சி மாற்றத்தின் போது எதிர்கட்சி பதவி கூட கிடைக்காத அளவிற்கு 2011ஆம் ஆண்டு திமுக நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. இதனையடுத்து கடும் போராட்டத்திற்கு மத்தியில் மீண்டும் 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஸ்வரூபம் எடுத்த திமுக நூலியையில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பை இழந்தது. இருந்து போதும் எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றது. இதனையடுத்து திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைந்த நிலையில், அக்கட்சியின் தலைவராக 2018ஆம் ஆண்டு பொறுப்பேற்றார் ஸ்டாலின்,
stalin old photo
அப்போது நடைபெற்ற மக்களவை தேர்தல், உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் என தொடர் வெற்றிகளை திமுக குவித்தது. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை திமுக கைப்பற்றியது. முதலமைச்சர் ஆகவே முடியாது என கூறியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதலமைச்சராக பொறுப்பேற்று அசத்தினார் ஸ்டாலின்,
நாடே தமிழகத்தின் மகளிர் உரிமை தொகை, காலை உணவு திட்டம், பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தங்கள் மாநிலங்களிலும் செயல்படுத்தி வருகிறது. இந்தநிலையில் தான் தனது 3ஆண்டு கால ஆட்சியை முடித்து 4 ஆம் ஆண்டை நோக்கி திமுக அரசு வெற்றிகரமாக ஸ்டாலின் தலைமையில் பயணித்து வருகிறது