வேற லெவில் பாம்பன் புதிய தூக்குபாலம்! லிப்ட் வசதியுடன் செங்குத்துப் பாலம்! கடலிலேயே இரண்டு மாடி கட்டிடம்!

First Published | Nov 5, 2024, 3:39 PM IST

Pamban Bridge: ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலத்திற்குப் பதிலாக புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. 2 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தப் பாலத்தில் கப்பல்கள் செல்ல 77 மீட்டர் நீளமுள்ள செங்குத்து தூக்குப் பாலமும் அமைக்கப்பட்டுள்ளது.

Pamban Bridge

ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தில் ஏராளமான விரிசல்கள் விழுந்ததையடுத்து, அதற்குப் பதிலாக புதிய பாலம் கட்ட கடந்த 2018ம் ஆண்டு மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. இந்தத் திட்டத்துக்காக ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டு, கடந்த 2019ம் ஆண்டு ரயில்பாலப் பணிகளை பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

இந்தியாவிலேயே கடலுக்குள் கட்டப்பட்ட முதல் ரயில்வே பாலம் பாம்பன் ரயில்வே பாலம். இது கடந்த 1914ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டி பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டதால் பாலத்தில் அடிக்கடி தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் பாலத்தில் அடிக்கடி விரிசல் விழுவதாலும், பழைய பாலம் அருகிலேயே புதிய ரயில் பாலம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக 545 கோடி மதிப்பிட்டில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக  ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos


அதுபோல் இந்த பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் கடந்து செல்லும்போது மேல்நோக்கி திறந்து மூடும் வகையில் 77 மீட்டர் நீளமும், சுமார் 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவில் ஆன தூக்குப்பாலமும் கட்டப்பட்டுள்ளது. இதற்காக கடலில் 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்கள்,  99 இணைப்பு கர்டர்களுடன் 37 மீட்டர் உயரம், 77 மீட்டர் நீளத்தில் இந்த செங்குத்து ரயில் தூக்குப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய ரயில் பாலத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்கு பாலம் விமானத் தொழில் நுட்பத்திற்கு பயன்படக்கூடிய அலுமினிய உலோகக் கலவையால் உருவாக்கப்பட்டது. பாம்பன் சாலைப் பாலத்துக்கு இணையான உயரத்தில், புதிய ரயில் பாலத்தின் நடுவே கப்பல்கள் செல்ல 27 மீட்டர் உயரத்துக்கு ஹைட்ராலிக் லிஃட் மூலம் இயங்கக் கூடியது.  இதன் எடை சுமார் 700 டன். செங்குத்து தூக்கு பாலத்தின் இருபுறமும் உள்ள தூண்களின் மேல் ஹைட்ராலிக் லிப்ட் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் கணினி மூலம் பாலத்தை மூன்று 3 நிமிடத்திற்குள் மேலே தூக்கவும். இரண்டு நிமிடத்திற்குள் இறக்கி கொள்ள முடியும்.

தூண்களில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு வட கம்பிகள் ராட்சத சக்கரத்தில் பொருத்தப்பட்டு இயந்திரத்தின் உதவியுடன் முன்நோக்கி சுற்றும் போது பாலம் மேலே நோக்கி எழும்புகிறது. பின்னர் அந்த சக்கரம் பின்னோக்கி சுற்றும் போது பாலம் கீழே இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

செங்குந்து தூக்கு பாலத்திற்கு அருகில்  இரண்டு மாடி கட்டிடமும் கடலிலேயே கட்டப்பட்டுள்ளது. இதில், ஆபரேட்டர் அறை, டிரான்ஸ்பார்மர் அறை, மின்சார கேபிள் உள்ளிட்ட சாதனங்கள் உள்ளன. பாலத்தில் சோதனை ஓட்டம் நிறைவு பெற்றதை அடுத்து ரயில்வே பாதுகாப்பு முதன்மை அதிகாரியின் ஒப்புதலுக்குப் பிறகு விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!