மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துப் பேசியுள்ளார். முதல்வர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள அமைச்சர் சேகர்பாபு அழைப்பு விடுத்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இருவரும் அரசியல் மற்றும் கலை சார்ந்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக உதயநிதி தெரிவித்துள்ளார்.
கமலை அடுத்தடுத்து சந்திக்கும் துணை முதலமைச்சர் டூ அமைச்சர் வரை! காரணம் என்ன.?
தமிழகத்தில் திமுக-அதிமுகவிற்கு எதிராக அரசியல் தொடங்கியவர் நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என தனது கட்சிக்கு பெயரிட்டவர் தேர்தலில் தனித்து போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றார். ஆனால் ஒரு சில தேர்தல்களுக்கு பிறகு தனித்து போட்டியிட முடியாத காரணத்தால் கூட்டணி அமைத்தார்.
அந்த வகையில் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஐஜேகே, சரத்குமார், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளோடு கூட்டணி அமைக்கப்பட்டது. இந்த தேர்தலில் வாக்குகள் பெற்றாலும் அந்த வாக்குகள் வெற்றிக்கு வித்திடவில்லை.
24
திமுக கூட்டணியில் கமல்
இதனால் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் இறங்க திட்டமிட்டார் கமல். அதற்கு ஏற்றார் போல் 2024ஆம் ஆண்டு நாடளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி உறுதியானது. எனவே இரண்டு முதல் 3 லோக்சபா சீட் வழங்க வேண்டும் மநீம வலியுறுத்தியுது. ஆனால் ஒரு ஒரு சீட் என திமுக உறுதியாக இருந்தது. மேலும் கோவையில் போட்டியிடுவதென்றால் திமுக சின்னத்தில் போட்டியிட நிர்பந்தித்தது. ஆனில் இதனை ஏற்றுக்கொள்ளாத கமலுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டது. அந்த வகையில் இந்தாண்டு மத்தியில் ராஜ்யசபா சீட் கமலுக்கு வழங்கப்படவுள்ளது.
34
கமலுக்கு ராஜ்யசபா சீட்
இந்த சூழ்நிலையில் நடிகர் கமல் அமெரிக்காவில் ஒரு மாத காலம் ஏஐ தொழில்நுட்பம் தொடர்பாக படிக்க சென்றிருந்தார். இதனையடுத்து கடந்த வாரம் சென்னை திரும்பினார். இந்த நிலையில் நேற்று மநீம தலைவரை அமைச்சர் சேகர்பாபு சந்தித்து பேசினார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாள் மார்ச் 1ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அந்த வகையில் வட சென்னை திமுக சார்பாக பிரம்மாண்ட விழா ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியானது. மேலும் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
44
உதயநிதியோடு கமல் சந்திப்பு
இந்த நிலையில் இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கமல்ஹாசனை சந்தித்து பேசினார். இது தொடர்பாக உதயநிதி வெளியிட்டுள்ள பதிவில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் - கலைஞானி கமல் ஹாசன் சாரை இன்று அவருடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அன்போடு வரவேற்று அரசியல், கலை என பல்வேறு துறைகள் சார்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்ட கமல் சாருக்கு என் அன்பும், நன்றியும் என கூறியுள்ளார்.