டெபாசிட் இழப்பது தானே உங்கள் தேர்தல் வியூகம்! மைக்கை நீட்டினாலே உளறும் திரள்நிதி சீமான்! அலறவிடும் தவெக!

Published : Feb 13, 2025, 12:23 PM IST

சீமான், விஜய்யின் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை விமர்சித்ததற்கு, தவெக கட்சி கடுமையாக பதிலடி கொடுத்துள்ளது.

PREV
16
டெபாசிட் இழப்பது தானே உங்கள் தேர்தல் வியூகம்! மைக்கை நீட்டினாலே உளறும் திரள்நிதி சீமான்! அலறவிடும் தவெக!
டெபாசிட் இழப்பது தானே உங்கள் தேர்தல் வியூகம்! மைக்கை நீட்டினாலே உளறும் திரள்நிதி சீமான்! அலறவிடும் தவெக!

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்க்கு  ஆதரவாக சீமான் பேசி வந்ததால் 2026  சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் தான் தவெக மாநில மாநாட்டில் சீமானை மறைமுகமாக விமர்சித்து விஜய் பேசியிருந்தார். இதனையடுத்து செல்லும் இடமெல்லாம் தம்பி தம்பி என அழைத்து வந்த சீமான் கடுமையாக விமர்சிக்க தொடங்கினார். 

26
seeman

இந்நிலையில் அவதூறாக பேசிய வழக்கில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜராகிய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தவெக தலைவர் விஜய் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

36
Vijay and Prashant Kishor

அதற்கு பதிலளித்த அவர் எனக்கு தேர்தல் வியூக வகுப்பாளர்கள் மீது நம்பிக்கை இல்லை. நாம் உடலில் கொழுப்பு கேள்வி பட்டிருப்போம். அதுபோல பணக்கொழுப்பு கேள்விப்பட்டுள்ளீர்களா? எப்படி ஒருவருக்கு வாய்க்கொழுப்பு அதிகம் என்று கூறுவோமோ, அதுபோல பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் இதெல்லாம் தேவைப்படும். தமிழ்நாட்டை பற்றி எதுவும் தெரியாத வியூக வகுப்பாளர்களை இங்கு அழைத்து வருவது என்பது பணக் கொழுப்பு என்று கூறினார். இந்நிலையில் திரள்நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள அண்ணன் சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவது ஆச்சரியமில்லை என தமிழக வெற்றிக் கழகம் பதிலடி கொடுத்துள்ளது. 

46
tvk sampath kumar reply seeman

இதுகுறித்து தவெக மாநில கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் ஆ. சம்பத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்:  ஊடகவியலாளர்கள் ஒலிவாங்கியை நீட்டிவிட்டால் அண்ணன் சீமான் எதையாவது உளருவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். சமகால சமூகச் சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூக வடிவமைப்பாளர்களை நியமிப்பதன் அவசியத்தை புரிந்துகொள்ளாமல் பணக் கொழுப்பு என்று பகிரங்கமாக அறிவித்துள்ள அண்ணன் சீமானுக்கு நடைமுறை அரசியல் யதார்த்தம் புரியவில்லை என்று தான் அர்த்தமாகிறது. 

56
Seeman

ஒவ்வொரு தேர்தலிலும் கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட அண்ணன் சீமான் இன்னும் எத்தனை ஆண்டுகள் "வென்றால் மகிழ்ச்சி,.தோற்றால் பயிற்சி" என்று நாம் தமிழர் உறவுகளை உசுப்பேத்திக் கொண்டே இருக்கப் போகிறாரோ தெரியவில்லை? திரள்நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள அண்ணன் சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவது ஆச்சரியமன்று. அண்ணே, நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவதற்காக அரசியல் செய்கிறோம், நீங்கள் பட்டிமன்றத்தில் பேசுவது தான் அரசியல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். 

66
seeman and vijay

நாங்கள் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறுவது எப்படி என்று சிந்திக்கிறோம் நீங்கள் தமிழ்தேசிய அரசியலை எப்படி வெற்றி பெறாமல் வைத்திருப்பது என்று சிந்திக்கிறீர்கள். பிரபாகரனிசத்தை முன்வைத்து கட்சி தொடங்கிய நீங்கள் இப்போது சீமானிசத்தில் கொண்டு போய் கட்சியை நிறுத்தியிருக்கிறீர்கள். ஒன்று சொல்லட்டுமா அண்ணே, எங்கள் தலைவர் தளபதி விஜய் தன் ரசிகர்களை அரசியல் கட்சியின் தொண்டர்களாக உருமாற்றம், செய்து வருகிறார். நீங்கள் உங்கள் கட்சியின் தொண்டர்களை உங்கள் ரசிகர்களாக உருமாற்றம் செய்து வருகிறீர்கள். உங்களோடு என்றும் எங்களுக்கு ஒத்து போகாது அண்ணே என சம்பத்குமார் காட்டமாக தெரிவித்துள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories