சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் சமூகப் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் https://chennai.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஒப்பந்த அடிப்படையில் வேலை.! மாத சம்பளம் இவ்வளவா.? உடனே விண்ணப்பிக்க அரசு அழைப்பு
தமிழக அரசு பணியிடங்களுக்கு அரசு பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு பணியாளர் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த நிலையில், ஒப்பந்த அடிப்படையிலும் பணியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் பல்வேறு துறையில் காலியாக உள்ள இடங்களுக்கு பணியாளர் தேர்வு நடைபெறுகிறது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை தெற்கு காவல் எல்லைகுட்பட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Special Juvenile Police Unitல் ஓராண்டுக்கு தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிட இரண்டு சமூகப் பணியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
24
கல்வி தகுதி.? மாத சம்பளம் என்ன.?
இதற்கு கல்வித்தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இருந்து சமூகப்பணி / சமூகவியல் / சமூக அறிவியல் இவற்றில் ஏதாவது ஒன்றில் இளங்கலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், கணினியில் பணி செய்யத் தெரிந்திருக்க வேண்டும். பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இப்பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் 42 வயது மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது. இப்பணியிடத்திற்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.18,536/- வழங்கப்படும். இதற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் விவரங்கள் https://chennai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
34
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு உரிய படிவத்தில் புகைப்படம் மற்றும் சுய கையொப்பமிட்ட சான்றிதழ்களுடன் இணைத்து செய்தி வெளியீடு செய்யப்பட்ட பதினைந்து நாட்களுக்குள் மாலை 5.45 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சென்னை தெற்கு, எண் : 1, புதுத்தெரு, GCC வணிக வளாகம், முதல்மாடி, ஆலந்தூர், சென்னை 600016. (RTO office அருகில்) என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.
44
விண்ணப்பங்கள் தேர்வு முறை
முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள், நிர்ணயிக்கப்பட்ட தகுதிளைக் கொண்டிராதவர்கள் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேராத விண்ணப்பங்கள் ஆகியன பரிசீலிக்கப்படாது. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும், இது குறித்து அரசின் முடிவே இறுதியானது. மேற்காணும் பணியிடத்திற்கு நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் நபர். பணியில் சேரும் நாளன்று காவல் துறை சரிபார்ப்பு சான்றிதழ் (Police Verification) கட்டாயமாக வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.