சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு! எரிய வேண்டியது அடுப்பா? வயிறா? சொல்வது யார் தெரியுமா?

Published : Apr 08, 2025, 07:38 AM ISTUpdated : Apr 08, 2025, 10:15 PM IST

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்வானது இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்த விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
14
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு! எரிய வேண்டியது அடுப்பா? வயிறா? சொல்வது யார் தெரியுமா?
LPG Cylinder

எண்ணெய் நிறுவனங்கள்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா விலைக்கு ஏற்றார் போல இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசுக்கு அனுமதி வழங்கியது. அதன்படி பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைத்து வருகிறது. அதேபோல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயிக்கின்றன. 

Watch Video : LPG Price Hike | இலவச பஸ் யாரு கேட்டது? - கொந்தளிக்கும் பொதுமக்கள்

24
LPG Cylinder Price Hike

வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு

கடந்த 1ம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.43.50 குறைந்து ரூ.1,921.50ஆக விற்பனையானது. இந்நிலையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை கடந்த 10 மாதங்களாக எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வந்த நிலையில் நேற்று திடீரென 50 ரூபாய் உயர்ந்து பொதுமக்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில் ஒன்றிய பாஜக அரசே தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திராமல், இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: LPG Cylinder Price Hike: கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்

34
CM Stalin

சேடிஸ்ட் பாஜக

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா? உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்" என்பது, #SadistBJP அரசுக்கு மிகவும் பொருந்தும். உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, விலையை ஏற்றாதீர்கள் எனக் கெஞ்சும் பரிதாப நிலைக்கு நாட்டு மக்களைத் தள்ளிவிட்டார்களே?

இதையும் படிங்க:  சிலிண்டர் விலை உயர்வுக்கு நீலிக்கண்ணீர் வடிப்பதா.? ரூ.100 மானியம் என்ன ஆச்சு- அண்ணாமலை கேள்வி

44
BJP Government

விலை உயர்வை உடனே திரும்பப் பெறுக 

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு அமைந்திருக்கிறது. மக்களே அடாவடியாக விலையை உயர்த்திவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பா.ஜ.க.வின் வழக்கமாகிவிட்டது. இந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது.  ஒன்றிய பாஜக அரசே தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திராமல், இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெறுக என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

 

Read more Photos on
click me!

Recommended Stories